தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mudakathan Keerai Idly : மூட்டுவலி ஓடஓட விரட்டச்செய்யும் முடக்கத்தான் கீரை இட்லி! அடிக்கடி சேர்க்க ஆரோக்கியம் உறுதி!

Mudakathan Keerai idly : மூட்டுவலி ஓடஓட விரட்டச்செய்யும் முடக்கத்தான் கீரை இட்லி! அடிக்கடி சேர்க்க ஆரோக்கியம் உறுதி!

Priyadarshini R HT Tamil
Apr 27, 2024 07:00 AM IST

Mudakathan Keerai Idly : இந்தக்கீரையை பயன்படுத்தி தோசை மட்டுமல்ல துவையல், ரசம், சூப் என அனைத்தும் செய்யலாம்.

Mudakathan Keerai idly : மூட்டுவலி ஓடஓட விரட்டச்செய்யும் முடக்கத்தான் கீரை இட்லி! அடிக்கடி சேர்க்க ஆரோக்கியம் உறுதி!
Mudakathan Keerai idly : மூட்டுவலி ஓடஓட விரட்டச்செய்யும் முடக்கத்தான் கீரை இட்லி! அடிக்கடி சேர்க்க ஆரோக்கியம் உறுதி!

ட்ரெண்டிங் செய்திகள்

உளுத்தம்பருப்பு – கால் கப்

வெந்தயம் – 2 ஸ்பூன்

முடக்கத்தான் கீரை இலைகள் – 2 கப்

கல் உப்பு - தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவி போதுமான அளவு தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

முடக்கத்தான் கொடிகளில் இருக்கும் இலைகளை தனியாக பிரித்து நன்றாக கழுவிக் கொள்ளவேண்டும்.

கிரைண்டரில் ஊறவைத்தவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.

மிக்ஸி ஜாரில் கழுவிய முடக்கத்தான் இலையை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.

மாவு 15 நிமிடங்கள் நன்றாக அரைந்ததும் அரைத்த முடக்கத்தான் விழுதையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த மாவை அகலமான பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளால் நன்றாக கலந்து கொள்ளவேண்டும். பின் மூடி வைத்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவேண்டும்.

மாவு புளித்த பின் மீண்டும் ஒருமுறை கரண்டியால் கலந்துகொள்ளவேண்டும்.

இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இட்லிகளாக வார்த்து எடுக்கவேண்டும். 

இரும்பு தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து காயவைத்து ஒன்றரைக் கரண்டி மாவை ஊற்றி தோசைகளாக ஊற்றி மிதமான சூட்டில் வேகவிடவேண்டும். 

சிறிது நல்லெண்ணெய் விட்டு வேகவிட்டு, கீழ்புறம் பொன்னிறமாக மாறியதும் மெதுவாக திருப்பிப்போட்டு மேலும் சில நிமிடங்கள் வேகவைத்து இறக்கினால் முடக்கத்தான் தோசை ரெடி. 

கொஞ்சம் மொத்தமாக ஊற்றினால் முடக்கத்தான் ஊத்தப்பம் கிடைக்கும். இதில் கொஞ்சம் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வார்த்து எடுத்தால் முடக்கத்தான் வெங்காய ஊத்தப்பம் தயார்.  

அருமையான முடக்கத்தான் ரெசிபிகள் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், குருமா, அனைத்துவகை வெஜ் மற்றும் நான் வெஜ் கிரேவிகள் என எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

சூப்பர் சுவையில் அசத்தும். இந்த இட்லி, தோசை, ஊத்தப்பத்தில் கொஞ்சம் கீரையின் சுவை தெரியும். எனினும் குழந்தைகள் சாப்பிட விரும்பமாட்டார்கள்.

ஆனால் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும் இந்த ரெசிபிகளை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

முடக்கத்தான் கீரையின் நன்மைகள்

முடக்கத்தான் கீரை வீக்கத்து எதிரான குணங்கள் கொண்டது.

இது மூட்டுவலி, மூட்டுவீக்கம் மற்றும் ருமட்டாய்ட் ஆர்த்ரட்டிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாகும்.

கால்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வாதநோய் ஆகியவற்றுக்கு இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

சளி, நரம்பு கோளாறுகள், இடுப்பு வலி நோய் ஆகியவற்றுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறது.

ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி மற்றும் கீல்வாத நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிவாரணம் கொடுக்கிறது.

இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் ருமட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது.

காது வலி, சளி மற்றும் இருமலைப் போக்குவதற்கும் முடக்கத்தான் கீரை பயன்படுத்தப்படுகிறது.

இதில் உள்ள சிறப்பான வாயுத்தன்மை, மிதமான மலமிளக்கியாக செயல்படுகிறது.

முடக்கத்தான் கீரை இலை அல்லது பொடியை கொதிக்க வைத்து பருகினால், அது வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.

மாதவிடாய் வலிகளை போக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

முடக்கத்தான் கீரை உடலில் சோர்வைப் போக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

முடக்கத்தான் கீரை சரும வியாதிகளுக்கு தீர்வாகிறது. தலையில் உள்ள பொடுகைப் போக்குகிறது. தலையின் அரிப்பை குணப்படுத்துகிறது. இதை அரைத்து தலைமுடியின் கால்களில் தடவினால் கூந்தலுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கிறது.

இந்தக்கீரையை பயன்படுத்தி தோசை மட்டுமல்ல துவையல், ரசம், சூப் என அனைத்தும் செய்யலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்