தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Immunity Booster : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைப்பொடி; சளி, இருமல், காய்ச்சலை நீக்கும்!

Immunity Booster : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைப்பொடி; சளி, இருமல், காய்ச்சலை நீக்கும்!

Priyadarshini R HT Tamil
Apr 23, 2024 03:00 PM IST

Immunity Booster : வாயுத்தொல்லை மற்றும் நெஞ்செரிச்சலை சரிசெய்யும். அனைத்துக்கும் ஒரு அற்புத தீர்வாகும். ஆரோக்கியமான இயற்கையான மூலிகைப்பொடி. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். பெரியவர்களின் அளவில் பாதியளவு குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.

Immunity Booster : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைப்பொடி; சளி, இருமல், காய்ச்சலை நீக்கும்!
Immunity Booster : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைப்பொடி; சளி, இருமல், காய்ச்சலை நீக்கும்! (Pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலே உடல் அசதி, உடல் சோர்வு ஆகியவை ஏற்படும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொல்லைகள் ஏற்படும். இதை ஒருமுறை செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

சுக்குப்பொடி – 3 ஸ்பூன் (சுக்கு எடுத்தால் தோலை நீக்கிவிட்டு, உரலில் இடித்து சேர்க்கவேண்டும்)

திப்பிலி பொடி – 2 ஸ்பூன்

அதிமதுரம் பொடி – 2 ஸ்பூன்

சித்தரத்தைப் பொடி – 2 ஸ்பூன்

மிளகுத்தூள் – 2 ஸ்பூன்

துளசி இலைப்பொடி – 3 ஸ்பூன்

செய்முறை

அனைத்து பொடிகளையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை வெளியிலே வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

பயன்படுத்தும் முறை

பால் கால் பங்கு, முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து இந்தப்பவுடரையும் சேர்த்து கொதிக்கவைத்தும் பருகலாம்.

தண்ணீரில் கொதிக்க வைத்தும் பருகலாம். 400 மில்லிலிட்டர் தண்ணீரில் இந்தப்பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அது 200 மில்லிலிட்டராக சுண்டும் வரை காத்திருந்து, வடிகட்டி பருகவேண்டும். அப்போதுதான் அந்த சாறு அனைத்தும் தண்ணீரில் நன்றாக இறங்கும்.

இதை சூடாக அல்லது மிதமான சூட்டடில் தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து பருகலாம். பனங்கற்கண்டு கலந்து பருகுவது நல்லது. அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் வலி, உடல் சோர்வை நீக்கும். பனங்கற்கண்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

சளி, இருமல், உடல் வலி, உடல் சோர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் குணப்படுத்தும். காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் பருகலாம். இடுப்பு வலி, உடல் வலி, உடல் சோர்வை போக்கும். 

வாயுத்தொல்லை மற்றும் நெஞ்செரிச்சலை சரிசெய்யும். அனைத்துக்கும் ஒரு அற்புத தீர்வாகும். ஆரோக்கியமான இயற்கையான மூலிகைப்பொடி. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். பெரியவர்களின் அளவில் பாதியளவு குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்