Broccoli Stir Fry : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ப்ரோக்கோலியில் பொரியல் செய்வது எப்படி? இதோ பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Broccoli Stir Fry : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ப்ரோக்கோலியில் பொரியல் செய்வது எப்படி? இதோ பாருங்க!

Broccoli Stir Fry : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ப்ரோக்கோலியில் பொரியல் செய்வது எப்படி? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Apr 20, 2024 09:38 AM IST

காலிஃபிளவர் போன்றே பச்சை நிறத்தில் இருக்கும் ப்ரோக்கோலியில் அதிக புரத சத்து உள்ளது. இந்த ப்ரோக்கோலியில் பொரியல் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

ப்ரோக்கோலியில் பொரியல்
ப்ரோக்கோலியில் பொரியல்

வெங்காயம் - 1/4 கப், பொடியாக நறுக்கியது

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

பூண்டு பற்கள் - 4

வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 2 அல்லது 2 டேபிள் ஸ்பூன் சில்லி பிளேக்ஸ்

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. ப்ரோக்கோலியை நன்றாக கழுவி சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். தண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் ப்ரோக்கோலி பூக்களை சேர்த்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் தண்ணீரில் ஒரு முறை அலசிக் கொள்ளவும்.

3. ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, பூண்டு பற்கள் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து பல்ஸ் மோடில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

4. கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் சிறிது கறிவேப்பிலை மற்றும் ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.

5. பின் சிறிது மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். ப்ரோக்கோலியில் இருக்கும் நீர் பிரிந்து நன்றாக வற்றியதும் கொர கொரப்பாக அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பிரட்டவும். அவை ப்ரோக்கோலியோடு சேர்ந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சூடாக பரிமாறவும்.

ப்ரோக்கோலி நன்மைகள்

உடலின் ஒட்டுமொத்த வலிமைக்கு புரதம் அவசியம். எலும்புகள், தசைகள், தோல் மற்றும் இரத்தத்தின் வளர்ச்சிக்கு புரதம் அவசியம். அதனால்தான் ஒவ்வொரு நாளும் புரதத்தை உட்கொள்வது மிகவும் முக்கியம்.

இந்த காய்கறிகளில் முட்டை மற்றும் இறைச்சியை விட அதிக புரதம் உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த காய்கறிகள் ஒரு வரப்பிரசாதம். சுவை மட்டுமின்றி நம் உடலுக்குத் தேவையான பல வகையான சத்துக்களையும் தருகின்றன.

காலிஃபிளவர் போன்றே பச்சை நிறத்தில் இருக்கும் ப்ரோக்கோலியில் அதிக புரத சத்து உள்ளது. கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு. இது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் சிறந்த மூலமாகும். இவை அனைத்தும் நமது ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. ப்ரோக்கோலியில் ஃபோலேட், மாங்கனீஸ், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் கே மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. இதில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் புற்றுநோயை திறம்பட எதிர்த்து போராட உதவி செய்கிறது.

ப்ரோக்கோலி ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பூ என்று கூறலாம். இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இந்த பச்சை ப்ரோக்கோலியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. இது அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. ப்ரோக்கோலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்தது.

இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ப்ரோக்கோலியில் சல்போராபேன் என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் உள்ளது. இது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தாங்கும் திறனைக் கொடுக்கும். ப்ரோக்கோலியின் வழக்கமான நுகர்வு சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கும். ஆனால் ப்ரோக்கோலி விலை எப்போதும் சற்று அதிகமாகவே இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.