தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fitness Tip: கழுத்துப்பிடிப்பால் பயங்கர வலியா? இதோ எளிய சிகிச்சை முறைகள்!

Fitness Tip: கழுத்துப்பிடிப்பால் பயங்கர வலியா? இதோ எளிய சிகிச்சை முறைகள்!

I Jayachandran HT Tamil
May 01, 2023 12:37 PM IST

கழுத்துப்பிடிப்பால் ஏற்படும் பயங்கர வலியைப் போக்குவதற்கான எளிய சிகிச்சை முறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

கழுத்துப் பிடிப்பு
கழுத்துப் பிடிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இவ்வாறு ஒத்தடம் தருவதால் கழுத்துப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில் உண்டான வீக்கம் குறையும்.

ஐஸ்கட்டிகளை ஒரு டவலில் பிடித்துக்கொண்டு குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது ஒத்தடம் தரவேண்டும்.

வலி ஏற்பட்டு முதல் 48 மணிநேரத்துக்கு இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

பின்னர் சுடுதண்ணீர் ஒத்தடம் அளிக்க வேண்டும்.

கழுத்துப்பிடிப்பு ஏற்பட்டால் பயங்கர வலியோடு உங்களது அன்றாடப் பணிகளைச் செய்வது மிகவும் கடினமாகிவிடும்.

ஒருசிலருக்கு இந்த பிடிப்பு ஓரிரு நாட்கள் இருக்கும். ஆனால் பொதுவாக மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரை கழுத்துப்பிடிப்பு விடாது.

எனவே ஐஸ் மற்றும் சுடுதண்ணீர் ஒத்தடத்தைத் தொடர்ந்து தரவேண்டும்.

ஒருவாரத்துக்கு மேல் வலி இருந்தால் மெனிங்கிட்டிஸ் எனப்படும் மோசமான பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

வலி விடும்வரை ஒத்தடம் தருவதை நிறுத்தாமல் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு பலமுறை ஒத்தடம் தரவேண்டும்.அப்போதுதான் பிடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகும்.

கழுத்துப்பிடிப்பு பயப்படும் அளவுக்கு பிரச்னை இல்லை. ஆனால் காய்ச்சல், தலைவலி, எரிச்சல் ஆகிய தொந்தரவுகளும் சேர்ந்திருந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

நான்-ஸ்டீராய்டு ஆன்டி இன்பிளமேட்டரி டிரக்ஸ் எனப்படும் NSAID மாத்திரைகள் மூன்று நாட்களுக்கு மூன்று வேளைக்கு சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். அத்துடன் கழுத்தை மென்மையாக நீட்டித்து பயிற்சி செய்தால் வலி குறையும்.

வைட்டமின் டி பற்றாக்குறை உடலில் இருந்தால் இவ்வாறு கழுத்துப் பிடிப்பு ஏற்பட்டு பயங்கர வலி உண்டாகும்.

வலி இருப்பவர்கள் தூங்கும்போது ஒருசாய்த்தோ அல்லது மல்லாக்கவோ படுக்க வேண்டும். அப்படி படுக்கும்போது கழுத்துக்கு மெலிதான தலையணையைப் பயன்படுத்த வேண்டும். முதுகுத்தண்டு அல்லது கழுத்துப் பிரச்னை இருப்பவர்கள் கட்டாயம் மெல்லிய தலையணையைப் பயன்படுத்த வேண்டும். முதுகுத்தண்டு பிரச்னை உள்ளவர்கள் தலையணையைத் தவிர்ப்பது நல்லதல்ல

பாராசிட்டமால், ஐபுருபன் போன்ற மாத்திரைகளை மருந்துக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டால் சற்று நிவாரணம் கிடைக்கும்.

வலி மாத்திரைகளை நான்கு மணிநேர இடைவெளி விட்டுத்தான் சாப்பிட வேண்டும்.

பச்சை இலை காய்கறிகள், பசலைக்கீரை, வால்நட், பாதாம் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டால் கழுத்துப்பிடிப்பு ஏற்படாது.

அத்துடன் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த விலைமீன் எனப்படும் சால்மன், டியூனா, மத்தி மீன்களை சாப்பிடலாம்.

பழங்களில் தர்பூசணி, மாதுளை, செர்ரி, புளுபெர்ரி ஆகியவற்றை சாப்பிடலாம்.

வலி குறையும்வரை கழுத்தை மென்மையாக நீட்சி செய்து பயிற்சி தர வேண்டும். வேண்டுமென்றால் கழுத்துப்பட்டை வாங்கி அணிந்து கொள்ளலாம்.

ஒத்தடங்களும், வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் மேற்குறிப்பிட்ட உணவுகளையும் சாப்பிட்டால் கழுத்துப்பிடிப்பைத் தவிர்க்கலாம். கழுத்துக்கு மெலிதான தலையணையை வைத்துக் கொண்டு தூங்குங்கள்.

அதிகபட்சம் ஒருவாரம் அல்லது பத்து நாள்களுக்குள் வலி விட்டுவிடும்.

WhatsApp channel

டாபிக்ஸ்