தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ginger Chutney : செரிமானத்தை தூண்டுவது மட்டுமல்ல நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும் இஞ்சி சட்னி! இப்டி செஞ்சு அசத்துங்க!

Ginger Chutney : செரிமானத்தை தூண்டுவது மட்டுமல்ல நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும் இஞ்சி சட்னி! இப்டி செஞ்சு அசத்துங்க!

Priyadarshini R HT Tamil
Apr 20, 2024 10:38 AM IST

Ginger Chutney : இப்படி பல்வேறு வழிகளில் இஞ்சியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதுபோல் செய்து சாப்பிடும்போது உங்கள் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. முக்கியமாக அசைவ உணவுகள் சாப்பிடும் நாட்களில் இஞ்சியை கட்டாயம் சேர்க்க வேண்டும். அது செரிமானத்தை தூண்டுகிறது.

Ginger Chutney : செரிமானத்தை தூண்டுவது மட்டுமல்ல நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும் இஞ்சி சட்னி! இப்டி செஞ்சு அசத்துங்க!
Ginger Chutney : செரிமானத்தை தூண்டுவது மட்டுமல்ல நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும் இஞ்சி சட்னி! இப்டி செஞ்சு அசத்துங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

இஞ்சி – அரை கப் நறுக்கியது

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 6

காய்ந்த மிளகாய் – 6

புளி – 2 துண்டு

துருவிய தேங்காய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை – அரை கப்

உப்பு – தேவையான அளவு

வெல்லம் – ஒரு துண்டு

தாளிப்பு செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 1

பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பில்லை – ஒரு கொத்து

செய்முறை

கடாயில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவேண்டும்.

வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவேண்டும்.

இதில் உப்பு சேர்த்து கிளறி, ஆறவிடவேண்டும்.

ஆறிய கலவையை, மிக்ஸியில் போட்டு அரைக்கவேண்டும்.

முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவேண்டும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும்.

தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி, இதில் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்க்கவேண்டும்.

தாளித்த பொருட்களை சட்னி மேல் ஊற்றவேண்டும்.

சுவையான இஞ்சி சட்னி தயார்.

நன்றி - ஹேமா சுப்ரமணியன். 

இஞ்சியில் உள்ள நன்மைகள்

தெற்காசியாவில் தோன்றியது இஞ்சி, உங்கள் உணவின் சுவையை மட்டும் கூட்டவில்லை, மருத்துவ குணங்களும் நிறைந்தது. இதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்.

கிமு 400 முதல் இஞ்சியை மக்கள் உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இது உணவுக்கு சுவை சேர்ப்பதுடன் மருந்ததாகவும் வரலாறு தொட்டே இருந்துள்ளது. இதை உணவில் சேர்ப்பதால் உங்கள் உடலில் நிகழும் மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் உடல் நீங்கள் உட்கொள்ளும் உணவுகளை செரிக்க இஞ்சி உதவுகிறது.

இஞ்சி சாப்படுவதால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படுத்துகிறது.

இஞ்சி உட்கொள்வதால் மாதவிடாய் கோளாறுகள் சரிசெய்யப்படுகிறது.

உடல் சோர்வு, வாந்தி, மயக்கம், வயிறு உபாதைகளை இஞ்சி போக்குகிறது.

புற்றுநோய்க்கு தீர்வாகிறது.

வலியை போக்குகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது.

இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

மூளையின் செயல் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு தேவையான இத்தனை நன்மைகள் கிடைக்கின்றன.

நீங்கள் செய்யும் மசாலாக்களில் இஞ்சியை பயன்படுத்தலாம்.

இஞ்சியில் ஜூஸ் செய்து பருகலாம்.

இஞ்சியைல் தேநீர் செய்து அருந்தலாம்.

மோருடன் தட்டிப்போட்டு பருகினால் வெயில் காலத்திற்கு நல்லது.

இப்படி பல்வேறு வழிகளில் இஞ்சியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதுபோல் செய்து சாப்பிடும்போது உங்கள் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. முக்கியமாக அசைவ உணவுகள் சாப்பிடும் நாட்களில் இஞ்சியை கட்டாயம் சேர்க்க வேண்டும். அது செரிமானத்தை தூண்டுகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்