Benefits of belly Button Oiling : தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்தால் ஆச்சர்யத்தில் மூழ்குவீர்கள்!
Benefits of Belly Button Oiling : தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் எப்படி வைப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்
ஒவ்வொரு இந்திய குழந்தையும் நிச்சயம் தனது தாயிடம் இருந்து ஒரு விஷயத்தை கேட்டிருப்பார்கள். எண்ணெய் வைத்து உடலை மசாஜ் செய்வது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும் என்று கூறியிருப்பார்கள். கட்டாயம் இதை அவர்களின் பெற்றோரும், அந்த வீட்டின் பெரியோர்களும் அறிவுறுத்திக்கொண்டே இருப்பார்கள்.
எண்ணெயில் அவ்வளவு நன்மைகள் உள்ளது. அதை நாம் சாப்பிட்டாலும் சரி, வெளியில் தேய்த்தாலும் எண்ணற்ற நன்மைகளை நமது உடலுக்கு அள்ளிக்கொடுக்கக்கூடியது தொப்புளில் எண்ணெய் தேய்ப்பது. எண்ணெய் மசாஜ்களிலே தொப்புளில் எண்ணெய் வைப்பது மிகவும் நல்லது.
இது தொன்றுதொட்டே நம்மிடம் இருந்துவரும் பழக்கங்களுள் ஒன்று. இதன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளுக்காக இது இன்றளவும் நம்மிடையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
மனஅழுத்தத்தை குறைக்கிறது, பதற்றத்தை போக்குகிறது
தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால், உங்களின் மனஅழுத்தம் குறையும். உங்களின் பதற்றம் நீங்கி, உங்கள் வயிற்றில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, உங்கள் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்துகிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
மனித உடலின் தொப்புள் மிக முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. நிறைய ரத்தநாளங்களுடன் அது இணைந்திருப்பதாக நம்பப்படுகிறது. எனவே தொப்புளில் எண்ணெய் வைத்து அதை மசாஜ் செய்யும்போது, அது ரத்த ஓட்டத்தை மட்டும் தூண்டவில்லை. சருமத்தையும் காக்கிறது மற்றும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது
ஆயுர்வேத மருத்துவ குணம் கொண்ட எண்ணெய்களை தொப்புளில் வைத்து மசாஜ் செய்யும்போது, அது மாதவிடாய் கால பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்கிறது. வீக்கத்தை குறைக்கிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, குடல் ஆரோக்கியம் சரியாக இருந்தால் நமது உடலில் 80 வகை வியாதிகள் ஏற்படாது. அதாவது உடலில் ஏற்படும் 80 வகையான வியாதிகளுக்கு குடல் ஆரோக்கியமின்மை காரணமாகிறது. எனவே உங்கள் குடலின் ஆரோக்கியத்தை நீங்கள் பார்த்துக்கொண்டால், இந்த 80 வியாதிகளில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.
எனவே குடல் ஆரோக்கியத்துக்கு தேவையான தீர்வுகளில் முக்கியமானது தொப்புளுக்கு எண்ணெய் வைப்பது. இதன்மூலம் உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
தூக்கமின்மை வியாதியை போக்குகிறது
உங்கள் தொப்புளில் எண்ணெய் வைத்து அதை மசாஜ் செய்தால், அது உங்களுக்கு ஹார்மோன் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இதனால், உங்கள் மனம் அமைதியடைந்து, உங்களின் உறக்கமின்மையை போக்குகிறது.
மூட்டு வலிகளை போக்குகிறது
தொப்புளில் எண்ணெய் வைப்பது உங்கள் உடலில் பல நரம்புகள் மற்றும் ரத்த நாளங்ளுடன் தொடர்புகொண்டது. இது உங்களின் மூட்டுகளுக்கு போதிய ரத்த ஓட்டத்தைக்கொடுத்து, உங்கள் மூட்டுவலிகளை போக்குகிறது. எனவே கட்டாயம் தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யுங்கள்.
குழந்தைகளுக்கு மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது
உங்கள் குழந்தையின் தொப்புளில் தினமுமே இரவில் இரு துளிகள் எண்ணெய்விட்டு மசாஜ் செய்யலாம். அது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் அவர்கள் உட்கொள்ளும் உணவு வகைகள் கொடுக்க தவறுவதை செய்கிறது.
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது
உங்கள் தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து வந்தால், அது உங்கள் தொப்புள் பகுதிகள் உடலுக்கு தேவையாக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
இதனால் உங்களின் தலைமுடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர்கிறது. உங்கள் நரம்புகளுக்கு ஊட்டத்தை அளித்து, முடி கருப்பாவதை குறைக்கிறது. இளநரையை போக்க உதவுகிறது. உங்கள் தலைமுடியையும் முடிகால்களையும் பலப்படுத்துகிறது.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
இன்றைய நவீன உலகத்தில், கண் வறண்டுபோவது அனைவருக்கும் ஏற்படும் பிரச்னைகளுள் ஒன்றாக உள்ளது. உங்கள் தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யும்போது, அது வறண்ட நரம்புகளை சரிசெய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முகப்பருக்களை போக்குகிறது
தொப்புளில் எண்ணெய் வைப்பது உங்கள் முகப்பருக்கை குறைக்க உதவுகிறது. உடலின் சூட்டை குறைத்து, உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. உடலில் உள்ள எரிச்சல், தழும்புகளை போக்குகிறது.
எனவே தினமும் இரவில், வெயில் காலத்தில் விளக்கெண்ணெயும், மழைக்காலத்தில் நல்லெண்ணெயும் வைப்பது பொதுவாக உடலுக்கு இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது
அல்லது சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளின்பேரில் நீங்கள் மருத்துவ குணங்கள் நிறைந்த எந்த எண்ணெயை வேண்டுமானாலும் தொப்புளில் தடவலாம். சூட்டினால் ஏற்படும் வயிறு வலியை தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்து குணப்படுத்த முடியும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்