தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Ginger Pachadi Ginger Pachadi Is Good For The Stomach Eating Often Will Improve The Digestive System

Ginger Pachadi : வயிற்றுக்கு இதமான இஞ்சி பச்சடி! அடிக்கடி செய்து சாப்பிட செரிமான மண்டலம் சீராகும்!

Priyadarshini R HT Tamil
Mar 25, 2024 11:00 AM IST

Ginger Pachadi : இஞ்சி பச்சடி செய்வது எப்படி?

Ginger Pachadi : வயிற்றுக்கு இதமான இஞ்சி பச்சடி! அடிக்கடி செய்து சாப்பிட செரிமான மண்டலம் சீராகும்!
Ginger Pachadi : வயிற்றுக்கு இதமான இஞ்சி பச்சடி! அடிக்கடி செய்து சாப்பிட செரிமான மண்டலம் சீராகும்!

ட்ரெண்டிங் செய்திகள்

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மிளகாய் வற்றல் - 4

வர மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - சிறிய துண்டு

மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்

துருவிய வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை - 10 இலைகள்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

இஞ்சியை கழுவி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

புளியை அரை கப் சூடான தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவேண்டும்.

கடாயில் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும், அதில் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவேண்டும். இஞ்சி வதங்கியதும் ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவேண்டும்.

பின்னர் அதே கடாயில் வரமல்லியை சேர்த்து வறுக்கவேண்டும். பின்னர் மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவேண்டும். கனமான கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவேண்டும்.

பின் புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிடவேண்டும்.

பச்சடி கொதிக்க ஆரம்பித்தவுடன், பெருங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். சிறிது கெட்டியாகும் போது துருவிய வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளவேஷ்டும்.

பச்சடி நன்கு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும்போது இறக்கவிடவேண்டும்.

இஞ்சியில் உள்ள நன்மைகள்

தெற்காசியாவில் தோன்றியது இஞ்சி, உங்கள் உணவின் சுவையை மட்டும் கூட்டவில்லை, மருத்துவ குணங்களும் நிறைந்தது. இதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்.

கிமு 400 முதல் இஞ்சியை மக்கள் உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இது உணவுக்கு சுவை சேர்ப்பதுடன் மருந்ததாகவும் வரலாறு தொட்டே இருந்துள்ளது. இதை உணவில் சேர்ப்பதால் உங்கள் உடலில் நிகழும் மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் உடல் நீங்கள் உட்கொள்ளும் உணவுகளை செரிக்க இஞ்சி உதவுகிறது.

இஞ்சி சாப்படுவதால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படுத்துகிறது.

இஞ்சி உட்கொள்வதால் மாதவிடாய் கோளாறுகள் சரிசெய்யப்படுகிறது.

உடல் சோர்வு, வாந்தி, மயக்கம், வயிறு உபாதைகளை இஞ்சி போக்குகிறது.

புற்றுநோய்க்கு தீர்வாகிறது.

வலியை போக்குகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது.

இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

மூளையின் செயல் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு தேவையான இத்தனை நன்மைகள் கிடைக்கின்றன.

நீங்கள் செய்யும் மசாலாக்களில் இஞ்சியை பயன்படுத்தலாம்.

இஞ்சியில் ஜூஸ் செய்து பருகலாம்.

இஞ்சியைல் தேநீர் செய்து அருந்தலாம்.

மோருடன் தட்டிப்போட்டு பருகினால் வெயில் காலத்திற்கு நல்லது.

இப்படி பல்வேறு வழிகளில் இஞ்சியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதுபோன்ற பச்சடிகள் செய்து சாப்பிடும்போது உங்கள் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. முக்கியமாக அசைவ உணவுகள் சாப்பிடும் நாட்களில் இஞ்சியை கட்டாயம் சேர்க்க வேண்டும். அது செரிமானத்தை தூண்டுகிறது.

நன்றி – விருந்தோம்பல்

WhatsApp channel

டாபிக்ஸ்