Empty Stomach: காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்.. செரிமானம் முதல் சர்க்கரை வரை!
Empty Stomach : வெறும் வயிற்றில் பழச்சாறுகளை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் பழங்களாக நாம் சாப்பிடும் போது நார்ச்சத்து நிறைய உள்ளது. ஆனால் பழச்சாறுகளாக பிழிந்து எடுத்த பின்னர் நார்ச்சத்து முழுமையாக நீங்கி விடுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.

Empty Stomach : காலையில் எழுந்தவுடன் நம்மிடையே பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. பல் விலக்கி முகம் கழுவிய கையுடன் வெறும் வயிற்றில் அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. அந்த மாதிரி பழக்கம் இருக்கும் பட்சத்தில் கட்டாயம் மாற்றி கொள்ள வேண்டும். அதேபோல் நம்மில் பலருக்கு குறிப்பாக வெறும் வயிற்றில் எந்த பழ ஜூஸூம் குடிப்பது நல்லதல்ல என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். பழச்சாறுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்ற போதிலும் கூட அதற்கும் சில நேரகாலம் உண்டு. ஆனால் வெறும் வயிற்றில் பழச்சாறுகளை குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது. அதையும் அவசியம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
பழச்சாறுகளை ஏன் குடிக்கக்கூடாது?
வெறும் வயிற்றில் பழச்சாறுகளை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள நம்முடைய சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் பழங்களாக நாம் சாப்பிடும் போது நார்ச்சத்து நிறைய உள்ளது. ஆனால் பழச்சாறுகளாக பிழிந்து எடுத்த பின்னர் நார்ச்சத்து முழுமையாக நீங்கி விடுகிறது.
இதன் காரணமாக பழங்களை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக உயரும். இதையே ஜூஸ் வடிவில் குடித்தால், வேகமாக உயரும். எனவே பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் என்பதும் சிக்கல் தான். ஆனால் பழச்சாறுகளை வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாது.