Orange Eating Best Time : ஆரஞ்சு பழங்களை எப்போது சாப்பிடலாம்.. ஆயுர்வேத மருத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா?
Orange Eating Best Time : நாளின் எந்த நேரத்திலும் ஆரஞ்சு சாப்பிடலாம். சில கட்டுப்பாடுகளோடு எடுப்பது சிறந்தது. ஆகவே தான் சாப்பிட்ட பிறகு சாப்பிடக் கூடாது. ஆயுர்வேதத்தின் படி, உணவுக்குப் பிறகு ஆரஞ்சு சாப்பிடுவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்று ஆயுர்வேதம் கருதுகறது.

Orange Eating Best Time : ஆரஞ்சு அனைத்து பருவங்களிலும் கிடைக்கும் ஒரே பழம். மற்ற பழங்களை விட ஓரளவு விலையும் நம் பட்ஜெட்க்கு ஏற்ற அளவில் இருக்கும். ஏராளமான மக்கள் ஆரஞ்சு சாற்றை விரும்புகிறார்கள். குறிப்பாக கோடையில் குளிர்ந்த ஆரஞ்சு பழச்சாறுகளை பலர் குடிக்க விரும்புகிறார்கள். எல்லா வயதினருக்கும் பிடிக்கும். நோயாளிகளுக்கு கொடுப்பது பெரும்பாலும் ஆரஞ்சு தான்.
இருப்பினும், ஆயுர்வேதத்தின் படி, உணவுக்குப் பிறகு ஆரஞ்சு அல்லது ஆரஞ்சு சாறு குடிக்கக்கூடாது. ஏன் என்று ஆயுர்வேதம் விளக்குகிறது. பொதுவாக ஆரஞ்சு பழச்சாறு குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமம், முடி மற்றும் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
நாளின் எந்த நேரத்திலும் ஆரஞ்சு சாப்பிடலாம். சில கட்டுப்பாடுகளோடு எடுப்பது சிறந்தது. ஆகவே தான் சாப்பிட்ட பிறகு சாப்பிடக் கூடாது. ஆயுர்வேதத்தின் படி, உணவுக்குப் பிறகு ஆரஞ்சு சாப்பிடுவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்று ஆயுர்வேதம் கருதுகறது.