Honey Vs Jaggery : வெல்லம் மற்றும் தேன் பயன்படுத்துறீங்களா.. உங்கள் உடலுக்கு சிறந்தது எது தெரியுமா?
Honey Vs Jaggery : வெல்லம் மற்றும் தேன் பொதுவாக பல்வேறு வகையான தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்று தெரிந்து கொள்வது அவசியம். வெல்லம் மற்றும் தேனைப் பயன்படுத்துவது சர்க்கரைக்கு சமமான நன்மைகளைக் கொண்டுள்ளது. வெல்லம் என்பது ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியம்.

Honey Vs Jaggery : உங்களுக்கு உடல் பருமன் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், இனிப்புகள் அந்த பிரச்சனையை மேலும் அதிகரிக்கக் கூடும். உடல் எடையை குறைக்க வேண்டுமானால் நாம் சில விஷயங்களில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அதிலும் இனிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தலாமா என்பதை ஒருவர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பார்ப்போம்.
வெல்லம் மற்றும் தேன் பொதுவாக பல்வேறு வகையான தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்று தெரிந்து கொள்வது அவசியம். இருப்பினும், வெல்லம் மற்றும் தேனைப் பயன்படுத்துவது சர்க்கரைக்கு சமமான நன்மைகளைக் கொண்டுள்ளது. தேன் மற்றும் வெல்லம் பொதுவாக தமிழ் பாரம்பரிய உணவுகளில் இனிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை எவ்வாறு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன? அல்லது இது ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்துமா? இவற்றில் எது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்? என்பது பலருக்கும் பொதுவான கேள்விகளாக மனதில் எழுகின்றன.
வெல்லம் என்பது ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியம் என்பதில் சந்தேகமில்லை. பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி1, பி6, சி ஆகியவை உள்ளன. இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. வெல்லம் செரிமான அமைப்பை எளிதாக்க உதவுகிறது. இது அனைத்து உடல்நலப் பிரச்சினைகளையும் நீக்க உதவுகிறது.