தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Curry Leaves Chicken Chukka : கறிவேப்பிலை சிக்கன் சுக்கா வறுவல்; சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் ஏற்ற சைட் டிஷ்!

Curry Leaves Chicken Chukka : கறிவேப்பிலை சிக்கன் சுக்கா வறுவல்; சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் ஏற்ற சைட் டிஷ்!

Priyadarshini R HT Tamil
Apr 13, 2024 10:11 AM IST

Curry Leaves Podi Chicken Chukka : இந்தப்பொடியை ஒரு மாதம் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதை அனைத்து சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். அனைத்து டிஃபனுக்கும் செய்யலாம்.

Curry Leaves Chicken Chukka : கறிவேப்பிலை சிக்கன் சுக்கா வறுவல்; சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் ஏற்ற சைட் டிஷ்!
Curry Leaves Chicken Chukka : கறிவேப்பிலை சிக்கன் சுக்கா வறுவல்; சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் ஏற்ற சைட் டிஷ்!

ட்ரெண்டிங் செய்திகள்

சிக்கன் – ஒரு கிலோ

காய்ந்த மிளகாய் – 7

மிளகு – 2 ஸ்பூன்

சோம்பு – ஒன்றரை ஸ்பூன்

சீரகம் – ஒன்றரை ஸ்பூன்

வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 4

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - பூண்டு விழுது – 3 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

செய்முறை

கடாயில் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து ஆறவிடவேண்டும்.

பின்னர் கடாயில் வரமல்லி, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து நன்றாக ஆறவிட்டு காய்ந்த மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்க்கவேண்டும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து கலந்துவிட்டு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

பிறகு உப்பு, மஞ்சள் சேர்த்து கலந்து, சிக்கனை சேர்த்து கலந்துவிடவேண்டும். 5 நிமிடம் வேகவிடவேண்டும்.

பின்னர் உப்பு, அரைத்த மசாலா பொடியை சிறிது சிறிதாக சேர்த்து கலந்துவிட்டு வேகவிடவேண்டும்.

தண்ணீர் வற்றி வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவேண்டும்.

கறிவேப்பிலை சிக்கன் சுக்கா தயார்.

கறிவேப்பிலை சிக்கன் வறுவல், கறிவேப்பிலை மசாலாப் பொடி சேர்த்து செய்வது. இந்த சிக்கன் வறுவல் செய்வதற்கு இந்த கறிவேப்பிலை பொடிதான் முக்கியமான பொருள்.

இந்த கறிவேப்பிலை பொடியை எப்போதும் உடனடியாக தயாரித்துக்கொள்ள வேண்டும்.

அவ்வப்போது ஃபிரெஷ்ஷாக தயாரித்தால், மசாலா நன்றாக இருக்கும். மொத்தமாக தயாரித்தும் வைத்துக்கொள்ளலாம். காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால் நல்லது.

இந்தப்பொடியை ஒரு மாதம் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதை அனைத்து சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். அனைத்து டிஃபனுக்கும் செய்யலாம்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மனஅழுத்தத்துக்கு மருந்து

சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது

வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.

சாப்பிடுவதற்கு எளிதானது

சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.

சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது

இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்பை வலுப்படுத்துகிறது

இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

எடை இழக்க உதவுகிறது

புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.

சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்