Anna Serial: கெத்து காட்டிய சண்முகம்.. வான்டட் ஆக வந்து பல்பு வாங்கிய பாண்டி! - கலகல அண்ணா சீரியல்!-zee tamil anna serial latest today episode update - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anna Serial: கெத்து காட்டிய சண்முகம்.. வான்டட் ஆக வந்து பல்பு வாங்கிய பாண்டி! - கலகல அண்ணா சீரியல்!

Anna Serial: கெத்து காட்டிய சண்முகம்.. வான்டட் ஆக வந்து பல்பு வாங்கிய பாண்டி! - கலகல அண்ணா சீரியல்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 21, 2024 12:34 PM IST

மறுநாள் காலையில் சண்முகத்துக்கு கோட்டு சூட்டு போட்டு அவனை ரெடி பண்ண, சௌந்தரபாண்டி சனியனுக்கு போன் போட்டு, அந்த சண்முகம் இந்த பங்க்ஷனுக்கு வரக்கூடாது பார்த்துக்கோ என்று சொல்கிறார்.

அண்ணா சீரியல் அப்டேட்!
அண்ணா சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சனியன், நீ அந்த ஸ்கூல் பங்க்ஷனுக்கு போக வேண்டாம் என்று சண்முகத்திடம் சொல்ல, சண்முகம் காரணம் கேட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

அதாவது, சனியன் லுங்கியோட யாராவது ஸ்கூலுக்கு போவாங்களா என்று கேட்க,  இதைக் கேட்ட பரணி ஆமா சனியன் சொல்றது சரிதான், என்று சண்முகத்தின் தங்கைகளுடன் சேர்ந்து, கோட்டு சூட்டு தைக்க முடிவெடுக்கிறார்.

அதன் பிறகு சண்முகத்தை டெய்லர் கடைக்கு கூட்டி செல்ல, சண்முகம் சட்டை இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும் என்று கறார் காட்டுகிறான். 

தொடர்ந்து, கோட்டு சூட்டு தைக்க அளவு கொடுக்கின்றனர். மறுபக்கம் சௌந்தரபாண்டி பிரின்சிபலை சந்தித்து, அவரை அடித்து, உனக்கு அந்த சண்முகம் பெரிய ஆளா போயிட்டானா, நீ திரும்பவும் பத்திரிக்கை அடிக்கணும் 

அதுல சிறப்பு விருந்தினர் என்று என் பேரு இருக்கணும், அத தான் நீ இந்த ஊருக்கு கொடுக்கணும். அந்த சண்முகம் இந்த பங்ஷனுக்கு வரக்கூடாது என்று சொல்ல, பிரின்ஸ்பல் வேறு வழி என்று சம்மதம் சொல்கிறார். இந்த விஷயம் அறிந்து இசக்கியும், பாக்கியமும் மரியாதைய கேட்டு வாங்க கூடாது என்று கலாய்க்கின்றனர்.

அடுத்ததாக, தங்கைகள் சண்முகத்தை இங்கிலீஷில் பேச வைக்க முடிவெடுத்து, நைட்டெல்லாம் அவனுக்கு பிராக்டிஸ் கொடுக்கின்றனர். 

அவன் இங்கிலீஷ் பேச தடுமாறி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்குகிறான். ஸ்கூலில் சண்முகம் போட்டோ போட்ட பேனர் எல்லாம் எடுத்து விட்டு, சௌந்தரபாண்டி போட்டோ போட்ட பேனரை மாற்றுகின்றனர்.

மறுநாள் காலையில் சண்முகத்துக்கு கோட்டு சூட்டு போட்டு அவனை ரெடி பண்ண, சௌந்தரபாண்டி சனியனுக்கு போன் போட்டு, அந்த சண்முகம் இந்த பங்க்ஷனுக்கு வரக்கூடாது பார்த்துக்கோ என்று சொல்கிறார்.

சண்முகம் கோட்டு சூட்டில் வர, சனியன் ஆள் அடையாளம் தெரியாததால், ஏதோ புது அதிகாரி வந்திருக்காரு என்று நினைத்துக் கொண்டு, அமைதியாக இருந்துவிட்ட நிலையில், தங்கைகள் அவனை கூட்டிக்கொண்டு கிளம்புகின்றனர்.

சண்முகம் ரோடெல்லாம் நடந்து வர, அவனை பார்த்து எல்லோரும் வணக்கம் போடுகின்றனர். யார் இந்த அதிகாரி என்று கேட்க, சண்முகம் என்ன பார்த்தா இப்படி எல்லாம் கேட்கிறார்கள் என ஆச்சரியப்படுகிறான்.

பிறகு சனியன், சண்முகம் வரல… ஏதோ ஒரு ஆபிசர் தான் வராரு என்று சௌந்தரபாண்டிக்கு சொல்ல, அதை கேட்டு அவர் சந்தோஷம் அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.