தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ranveer Singh:'என்னது நான் காங்கிரஸுக்கு ஓட்டு கேட்டேனா':பறந்த புகார்.. ரன்வீர் சிங் ஃபேக் வீடியோவை விட்டவர் மீது Fir!

Ranveer Singh:'என்னது நான் காங்கிரஸுக்கு ஓட்டு கேட்டேனா':பறந்த புகார்.. ரன்வீர் சிங் ஃபேக் வீடியோவை விட்டவர் மீது FIR!

Marimuthu M HT Tamil
Apr 24, 2024 12:32 PM IST

Ranveer Singh: நடிகர் ரன்வீர் சிங்கின் டீப் ஃபேக் வீடியோவை வெளியிட்டவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவாகியுள்ளது.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் ரன்வீர் சிங்கின் தந்தை ஜக்ஜித் சிங் பாவ்னானி அளித்தப் புகாரின்பேரில், டீப் ஃபேக் வீடியோவை பரப்பிய இந்திய காங்கிரஸ் கட்சியுடைய தெலங்கானா மாநில செய்தித்தொடர்பாளர் சுஜாதா பால் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபேஷன் ஷோ ஒன்றை விளம்பரப்படுத்த, உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில்  ரன்வீர் சிங் இருந்தபோது, ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியதாகவும் தெரிகிறது. 

அந்தப் பேட்டியில், "நமது வளமான கலாசாரம், பாரம்பரியம், வரலாறு மற்றும் மரபைக் கொண்டாடுவதே பிரதமர் மோடி ஜியின் நோக்கமும் குறிக்கோளும் ஆகும். ஏனெனில் நாம் நவீனத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வருகிறோம். ஆனால் நமது வேர்களை, நமது கலாசார பாரம்பரியத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

இப்படியிருக்க, டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கியவர்கள்,  வாரணாசியில் ரன்வீர் சிங் அளித்த பேட்டியின் விசுவல்களை எடுத்துக்கொண்டு, AI மூலம் ஆடியோவை மாற்றி, ரன்வீர் சிங் காங்கிரஸுக்கு வாக்கு கேட்பதுபோல மாற்றியுள்ளனர். 

குறிப்பாக வீடியோவின் முடிவில், மக்கள் நீதிக்காக போராடுவதை நிறுத்த வேண்டாம் என்று ரன்வீர் சிங் கூறுவதுபோல் இருக்கிறது. பின்னர் அந்த வீடியோவில் அவர் மறைகிறார். நீதியை எதிர்பார்க்கிறவர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று குரல் வருகிறது.

இதனை காங்கிரஸ் உடைய தெலங்கான மாநில செய்தித்தொடர்பாளர் சுஜாதா பால் எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

சுஜாதா பாலின் வீடியோவில் நடிகர் ரன்வீர் சிங் பேசுவதாவது, "நமது வலிமிகுந்த வாழ்க்கை, பயம் மற்றும் வேலையின்மையைக் கொண்டாடுவதே மோடிஜியின் நோக்கம் மற்றும் குறிக்கோள். ஏனென்றால் நாம் அநீதியை நோக்கி முன்னேறி வருகிறோம். ஆனால் நமது வளர்ச்சி மற்றும் நீதியைக் கேட்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. நீதிக்காக வாக்களிக்க வேண்டும், காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று கூறுவதுபோல் உள்ளது. 

நடிகர் ரன்வீர் சிங் இதை ஒருபோதும் கூறவில்லை என்றும், அவருக்கு எந்த அரசியல் கட்சியுடனும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரது தந்தை புகாரில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸார் இதுதொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துள்ளனர்.

எஃப்.ஐ.ஆர் பதிவு

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 417 (மோசடி), 468 (மோசடி நோக்கத்திற்காக செய்யும் மோசடி) மற்றும் 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக மோசடி) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகள் உள்ளிட்ட தொடர்புடைய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். டீப்ஃபேக் வீடியோக்கள் என்பவை யாரோ ஒருவர் உண்மையில் செய்யப்படாத அல்லது சொல்லப்படாத ஒன்றைச் செய்வதுபோல் உருவாக்குவது அல்லது தவறாக சித்தரிக்கும் வகையில் இருப்பது ஆகும்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானின் இதேபோன்ற டீப்ஃபேக் வீடியோ தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது நகர போலீசார் சமீபத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதிலும் அவர் ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பதுபோல் வீடியோ இருக்கிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்