தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ranveer Singh: பேசிய விஷயம் வேறு! Fake விடியோவால் சிக்கலில் மாட்டிக்கொண்ட ரன்வீர்

Ranveer Singh: பேசிய விஷயம் வேறு! Fake விடியோவால் சிக்கலில் மாட்டிக்கொண்ட ரன்வீர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 18, 2024 09:09 PM IST

ஆமிர்கானை தொடர்ந்து தற்போது ரன்வீர் சிங் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசிய விடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

வாரணாசியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்
வாரணாசியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்

ட்ரெண்டிங் செய்திகள்

மொத்தம் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளன. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை முடித்திருக்கும் நிலையில், தற்போது பிரபலங்களை டார்கெட் செய்து அவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிப்பது போல் பேக் விடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.

டீப் பேக் விடியோ

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர்கான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிப்பது போல் விடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்த விடியோவுக்கு ஆமிர்கான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் விடியோ பரப்பியது தொடர்பாக மும்பை க்ரைம் போலீசாரால் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இதுபோன்ற விடியோக்கள் ஏஐ (AI) தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது. தற்போது இதேபோன்றதொரு பிரச்னையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சிக்கியுள்ளார்.

மோடி அரசை விமர்சித்த ரன்வீர் சிங்

வாரணாசி சென்றிருந்த ரன்வீர் சிங் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் விமர்சித்து பேசியிருப்பது போல் விடியோ வெளியாகியுள்ளது. அதில் பொதுமக்கள் படும் கஷ்டங்களை பயன்படுத்தி கொண்டு ஆளும் கட்சி வளர்கிறது எனவும், வேலையின்மை தலைவிரித்தாடி வருவதாகவும் பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருபோது போல் காட்சிகள் இடம்பிடித்திருந்தன.

அத்துடன், பொதுமக்கள் அனைவரும் தகவலறிந்து செயல்பட்டு, சரியான கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு ரன்வீர் சிங் விடியோவில் வலிறுத்துகிறார். அவர் பேசி முடிந்த பின்னர் காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு டேக்லைன் அந்த விடியோவில் தோன்றுகிறது.

போலி விடியோ

இந்த விடியோ தெளிவாக புனையப்பட்டது என கூறப்படுகிறது. விடியோவில் ரன்வீர் சிங் உதடு அசைவுகள் ஆடியோவுடன் பொருந்தவில்லை எனவும், சமீபத்தில் அவர் வாரணாசிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட காட்சியில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. அங்கு அவர் அளித்த பேட்டியில், வாரணாசி நகரத்தை புத்துயிராக்கியதில் பிரதமர் மோடியின் முயற்சிகளை பாராட்டியிருந்தார். இது அப்படியே மாற்றப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே இது போலியான விடியோ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரணாசியில் இருக்கும் நமோ காட் பகுதியில் நடந்த மனீஷ் மல்கோத்ரா பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை கிரித்தி சனோன் ஆகியோர் பங்கேற்று ராம்ப் வாக் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு இடையில் இருவரும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று தங்களது ஆன்மிக தரிசனத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் ரன்வீர் சிங் பேட்டியளித்த விடியோ, நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களிடமிருந்து வாக்குகளை அறுவடை செய்ய பயன்படுத்தப்பட்டிருப்பது பாலிவுட் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரன்வீர் சிங் புதிய படம்

ரன்வீர் சிங் தற்போது சிங்கம் அகெயின் என்ற படத்தில் நடித்து வருகிறார். ரோகித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜத் தேவ்கன், கரீனா கபூர், அக்‌ஷய் குமார், தீபிகா படுகோனே, டைகர் ஷெராஃப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். தமிழில் சூப்பர் ஹிட்டான சிங்கம் சீரிஸ் படத்தின் மூன்றாவது படமாக சிங்கம் அகெயின் படம் உருவாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்