Priyamani: ‘ஆமா எங்களுக்கு தோல் அப்படி இல்லதான்.. எங்களாலும் ஹிந்தி பேச முடியும்’ - வெளுத்த பிரியாமணி!
என்ன அங்கேயும், இங்கேயும் இலக்கணம் வேண்டுமானால் சிறிது வித்தியாசப்படலாம். ஆனால் எமோஷனை வெளிப்படுத்தும் சமயத்தில், அது ஒரு பொருட்டல்ல. வடக்கு மற்றும் தெற்கு என்ற பாகுபாடு மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எப்போதும் இந்திய நடிகர்கள்தான்.

தென் இந்தியாவில் இருந்து வரும் நடிகர்களை ‘தென்னிந்திய நடிகர்’ என்று குறிப்பிடுவது குறித்து பிரியாமணி மனம் திறந்துள்ளார்.
பிங்க்வில்லா செய்தி தளத்திற்கு பேட்டியளித்த அவர், தனது சமீபத்திய இந்தி படமான ஆர்டிகிள் 370 க்கு கிடைத்த வரவேற்பு குறித்தும், தென்னிந்தியாவில் ஒரு நடிகராக பணிபுரியும் போது அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார்.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியதால், இந்தி படங்களில் இருக்கும் வழக்கமான டெம்ப்ளேட்டுகளை எதிர்கொண்டீர்களா என்று கேட்டபோது, “ஆம், சில நேரங்களில் அவர்கள் (பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்கள்) ‘இது ஒரு தென்னிந்திய கதாபாத்திரம் என்பதால், நாங்கள் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம்' என்று கூறுவார்கள். விரைவில் இந்த நிலை மாறும் என நம்புகிறேன்” என்று கூறினார்.
'நாங்கள் மற்றவர்களைப் போலவே அழகாக இருக்கிறோம்'
மேலும் பேசிய அவர் , “ பாருங்கள்... நாங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்த மொழியை (இந்தி) எங்களாலும் மிகவும் சரளமாக பேச முடியும் என்று நான் நினைக்கிறேன்.
நாங்களும் மற்றவர்களைப் போலவே அழகாகவே இருக்கிறோம். எங்களுடைய தோல் பாலிவுட் நடிகைகளைப் போல பிரகாசமாகவும், வெளிர் நிறமாகவும் இல்லைதான்.
ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்று நினைக்கிறேன். தெற்கிலிருந்து வரும் பெண்கள், தெற்கிலிருந்து வரும் ஆண்கள் என தெற்கிலிருந்து வரும் அனைவருக்கும் மொழி தெரியும். அவர்களாலும் ஹிந்தியை மிகவும் சரளமாக பேச முடியும்.
என்ன அங்கேயும், இங்கேயும் இலக்கணம் வேண்டுமானால் சிறிது வித்தியாசப்படலாம். ஆனால் எமோஷனை வெளிப்படுத்தும் சமயத்தில், அது ஒரு பொருட்டல்ல. வடக்கு மற்றும் தெற்கு என்ற பாகுபாடு மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எப்போதும் இந்திய நடிகர்கள்தான்.” என்று பேசினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளவர் நடிகை பிரியாமணி. அட்டகாடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனவர், கடந்த 2007ம் ஆண்டு அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தில் நடித்து பரவலான கவனத்தை பெற்றார்.
அந்தப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார். அதைத்தொடர்ந்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரத்தொடங்கிய அவர், ராம் (2009), ராவணன் (2010), ராவணன் (2010), சாருலதா (2012) உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய முத்திரையை பதித்தார்.
இந்திய அளவில் பெரிய கவனம் பெற்ற வெப் சீரிஸான தி ஃபேமிலி மேன் சீரிஸில் நடித்து கவனம் ஈர்த்த அவர், தொடர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்ட ஜவான் திரைப்படத்திலும், ஆர்டிகிள் 370 திரைப்படத்திலும் தோன்றி கவனம் ஈர்த்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்