Ghilli Box Office: ‘ரீரிலிஸில் கில்லி கிடையாது.. அதுக்கு முன்னாடி 2 படங்கள் இருக்கு’ தியேட்டர் உரிமையாளர் ஷாக் தகவல்!
Ghilli Box Office: சிறு முதலீடு திரைப்படங்கள் என்பதை காட்டிலும், அனுபவம் இல்லாமல் படத்தை எடுக்கிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களை திரையிட நாங்கள் ரெடி, மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்களா? கடந்த 1 ஆண்டுகளாக சினிமா தியேட்டருக்கு போகாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
Ghilli Box Office: விஜய் நடித்த கில்லி திரைப்படம் தான் ரீரிலிஸ் செய்யப்பட்ட திரைப்படங்களில் அதிக வசூல் செய்து சாதனை செய்த திரைப்படம் என்று பேசப்பட்டு வரும் நிலையில், திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகியான திருப்பூர் சுப்பிரமணியன், டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அதை மறுத்துள்ளார். மேலும், கில்லி சாதனையை வேறு இரு படங்கள் ஏற்கனவே நிறைவேற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதோ அவருடைய அந்த பேட்டி:
கில்லி எப்படி ஹிட்?
ரீ-ரிலிஸ் செய்யப்பட்ட படங்களில் கில்லி தான் ஹிட் ஆன திரைப்படம் என்று சொல்வதில் நான் முரண்படுகிறேன். ஆயிரத்தில் ஒருவன் ரீரிலிஸ் ஆகி பயங்கரமாக ஓடியது. கர்ணன் ரீரிலிஸ் ஆகி பயங்கரமாக ஓடியது. எல்லாரும் கில்லியை மட்டும் தான் பேசுகிறார்கள்.
3 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரத்தில் ஒருவன் பெரிய அளவில் வசூல் செய்தது. அதே போல தான் கர்ணன் திரைப்படமும் வசூல் செய்தது. கர்ணன் ரீரிலிஸில் 100 நாட்கள் ஓடியதை மறந்துவிடக்கூடாது. கில்லியோடு ஒப்பிடும் போது, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் கர்ணன் இரண்டுமே மிகப்பழைய திரைப்படங்கள்.
எல்லா ஊர்களிலும் ஓடியது எது?
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முந்தைய திரைப்படங்கள். ஆயிரத்தில் ஒருவனோ, கர்ணனோ கில்லி அளவுக்கு வசூல் இல்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும், அந்த படங்கள் ரீரிலிஸ் ஆகும் போது பயங்கர மாஸ் இருந்தது. எல்லா ஊர்களிலும் அந்த படங்கள் ஓடின.
நல்ல படங்களை திருப்பி பார்த்தாலும் சந்தோசம் கிடைக்கும். உதாரணத்திற்கு ஆயிரத்தில் ஒருவன் படம் இன்று பார்த்தாலும், டைட்டிலில் ஆரம்பித்து எண்ட் கார்டு வரை நகர முடியாது. காதல், காமெடி, சண்டை என எல்லாமும் அந்த படத்தில் இருக்கும். கர்ணனும் அப்படி தான்.
அந்த இரு படங்கள் தான் டாப்!
மகாபாரதம், ராமாயணத்தை இன்று பேசுகிறோம். ஆனால், கர்ணன் திரைப்படத்தில் அன்றே அவ்வளவு அழகாக கையாண்டிருப்பார்கள். கில்லி படமும் சிறந்த திரைப்படம் தான். சண்டை, பாடல்கள் கலந்த நல்ல திரைப்படம் கில்லி.
சிறு முதலீடு திரைப்படங்கள் என்பதை காட்டிலும், அனுபவம் இல்லாமல் படத்தை எடுக்கிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களை திரையிட நாங்கள் ரெடி, மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்களா? கடந்த 1 ஆண்டுகளாக சினிமா தியேட்டருக்கு போகாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
அனுபவம் இல்லாமல் குவாலிட்டியே இல்லாமல் படத்தை எடுக்கிறார்கள். தினத்தந்தியில் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் படங்களின் விளம்பரத்தை பாருங்கள்.. படத்தின் பெயரை பார்த்தாலே மக்கள் பயப்படுகிறார்கள். இதை வருத்தப்பட்டு நான் சொல்லவில்லை; நிதர்சனத்தை கூறுகிறேன்.
எப்படி படம் ஓடும்?
டைட்டிலே தெரியாத, புரியாத ஒரு படத்தை எப்படி பார்க்க வருவார்கள்? நமக்கே தெரியாத ஒரு படத்தை, மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள்? தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சேர்ந்து சமீபத்தில் ஒரு மீட்டிங் போட்டோம். என் அனுபவத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் முடிந்த ஒரே மீட்டிங் அது தான்.
தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட ஒரே கோரிக்கை, ஓடிடி ரீலீஸ் காலத்தை அதிகரித்து தர வேண்டும் என்பது தான்,’’
என்று அந்த பேட்டியில் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவத்துள்ளார்.