58 Years of Aayirathil Oruvan: எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சேர்ந்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியான நாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  58 Years Of Aayirathil Oruvan: எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சேர்ந்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியான நாள் இன்று!

58 Years of Aayirathil Oruvan: எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சேர்ந்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியான நாள் இன்று!

Karthikeyan S HT Tamil
Jul 09, 2023 04:45 AM IST

58 Years of Aayirathil Oruvan: எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்' வெளியாகி இன்றோடு 58 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன்

அந்த வகையில், 1965 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. 'நாடோடி மன்னன்', 'மன்னாதி மன்னன்', 'அடிமைப் பெண்', 'எங்கவீட்டுபிள்ளை', 'அன்பே வா’', 'படகோட்டி', 'உலகம் சுற்றும் வாலிபன்', போன்ற மிகப் பிரமாண்டமான படம் என்று முத்திரை பதித்த படங்களில் ஒன்று தான் 'ஆயிரத்தில் ஒருவன்'. எம்.ஜி.ஆருகாக ஆர்.கே.சண்முகம். கதை, வசனம் எழுதினார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வசனங்கள் மிகக் கூர்மையாகவும் புத்திச்சாலித்தனமாகவும் அமைந்தன.

மருத்துவராக இருந்துகொண்டு, மக்களின் அவலங்களையும் அரசியல் சூழ்ச்சிகளையும் பேசிய வசனங்கள் எல்லாமே, எம்ஜிஆரின் திரை வாழ்விலும் அரசியல் வாழ்விலும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல, பெரிதும் உதவின. எம்ஜிஆர், எம்என் நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ் என ஒவ்வொருவரின் நடிப்பும் அசத்தலாக அமைந்தது. நாகேஷ் ஜோடியாக வரும் மாதவி, காமெடி நடிகை என்பதைத் தாண்டியும் மிக அழகாக ஜொலிப்பார்.

தீவு, படகு, கப்பல், கடல், செட் என பிரமாண்டம் கூட்டிக்கொண்டே போகும் இப்படத்தில் அனைத்து காட்சிகளும், பாடல்களும் அழகு ஜாலம் காட்டும். எம்ஜிஆர்ர் பேரழகனாகத் திகழ்வார். கண்ணதாசனும் வாலியும் பாடல்களை எழுதி இருந்தார்கள். பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

'ஆயிரத்தில் ஒருவன்’ ஜெயலலிதாவுக்கு இரண்டாவது படமாக அமைந்தது. எம்ஜிஆருடன் இணைந்து முதன்முதலாக நடித்தார் ஜெயலலிதா. எம்ஜிஆருடன் ஜெயலலிதா ஜோடி சேர்ந்த இந்தப் படம்தான், ஜெயலலிதாவின் திரை வாழ்விலும் அரசியல் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்தன.

திரையில் ஜொலித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதாவது 1965ம் ஆண்டு ஜூலை 9ந் தேதி இதே நாளில் இந்தப் படம் ரிலீஸாகியது.கிட்டத்தட்ட, 58 வருடங்களாகிவிட்டன. ஆனால்,நேற்று ரிலீஸானது போல் உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.