60 Years of Karnan: முதல் ஈஸ்ட்மேன் கலர் படம் - தமிழ் சினிமாவின் காவியமாக இருந்து வரும் கர்ணன்
தமிழ் சினிமாவின் காவியமாக கர்ணன் படம் இன்று வரையிலும் போற்றப்படுகிறது. படத்தில் கர்ணனாகவும் வாழ்ந்து காட்டியிருப்பார் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குநரான பி.ஆர். பந்தலு இயக்கத்தில் வெளியாகி உலகளவில் சூப்பர் ஹிட்டான படம் கர்ணன். இந்த படத்துக்கு ஏ. எஸ். நாகராஜன் திரைக்கதை எழுதியிருப்பார். மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தையும், அந்த பகுதியின் கதையின் முக்கிய அம்சங்களையும் அப்படியே திரையில் கொண்டு வந்திருப்பார்கள்.
மகாபாரத கதையை யாரும் எடுக்க துணிந்திராத போது, அதன் கதாபாத்தித்தை தன்னால் மட்டுமே செய்ய முடியும் என்பதை வெளிக்காட்டும் விதமாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.
தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே வாழ்பவர் என்ற பெயரெடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கர்ணனாக திரையில் வாழ்ந்து உச் கொட்ட வைத்திருப்பார்.
தமிழில் வெளியான முதல் ஈஸ்ட்மேன் கலர் படமாக இருந்து வரும் கர்ணன் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி. ராமாராவ், கிருஷ்ணனாக நடித்திருப்பார்.
பானுமதி, தேவிகா, அசோகன், முத்துராமன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருப்பார்கள். மிக பெரிய பொருள்செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட கர்ணன் திரைப்படம் தமிழ் சினிமாவின் காவியமாக இருந்து வருகிறது.
கிராபிக்ஸ் காட்சிகள் போன்ற வசதிகள் இல்லாத காலகட்டத்தில், குருஷேத்திர போர் காட்சியை, பலரது கடின உழைப்பாக மிகவும் நேர்த்தியாக உருவாக்கியிருப்பார்கள்.
எக்காலத்துக்கும் பொருந்தும் விதமாக இந்த படம் இருக்கும் என்பதை நிருபிக்கும் விதமாக கர்ணன் ரீமாஸ்டர் செய்யப்பட்டு 2012இல் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதிலும் 100 நாள்கள் ஓடி சாதனை புரிந்தது.
கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படத்தில் மொத்தம் 17 பாடல்கள் இடம்பிடித்திருக்கும்.
1964இல் பொங்கல் வெயீடாக கர்ணன் ரிலீசானது. தெலுங்கு, இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் படம் வெற்றிகரமாக ஓடி சாதனை புரிந்தது. சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் கர்ணன் பெற்றது.
அந்த காலத்திலேயே ரூ. 40 லட்சம் செலவில் தயாராகி, உலக அளவில் ஹிட்டானது. தமிழ் சினிமாவின் காவியமாக இருந்து வரும் கர்ணன் வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்