lingusamy: குறுக்கே வந்த ராஜ்கிரண்.. கதையை நிறுத்த சொன்ன விஜய்.. - விஜய் சண்டக்கோழி கதையை நழுவவிட்ட கதை தெரியுமா?
அப்போது நான், அடித்து விட்டுச் சென்றவன் அதைவிட பெரிய ஆளாக இருந்தால் எப்படி இருக்கும் என்று சொன்னேன். அப்படித்தான் சண்டக்கோழி திரைப்படத்தின் கதை உருவானது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சண்டக்கோழி. இந்தக்கதை முதலில் நடிகர் விஜய்க்குதான் சொல்லப்பட்டது. அதன் பின்னர்தான் இந்தப்படம் விஷாலுக்கு சென்றது. இந்த நிலையில் அது குறித்து இயக்குநர் லிங்குசாமி பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “ஒவ்வொரு பகுதியிலும் ஒரு முக்கியமான ஆள் இருப்பார். அவரை யாரோ தெரியாத நபர் ஒருவர் அடித்து விட்டு சென்று விட்டால் என்ன நடக்கும் என்பதை கதையாக நாங்கள் விவாதம் செய்து கொண்டிருந்தோம்.
அப்போது நான், அடித்து விட்டுச் சென்றவன் அதைவிட பெரிய ஆளாக இருந்தால் எப்படி இருக்கும் என்று சொன்னேன். அப்படித்தான் சண்டக்கோழி திரைப்படத்தின் கதை உருவானது.
இந்த கதையை முதலில் உருவாக்கியவுடன் நான் விஜய் சாரிடம் சென்று சொன்னேன். கதையை அவருக்கு விவரித்துக்கொண்டிருந்தேன். ராஜ்கிரண் கதைக்குள் நுழையப் போகிறார் என்று சொன்னவுடனே, அவர் கதை சொல்வதை நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டார்.
ஏன் என்று கேட்ட பொழுது, ராஜ்கிரண் சார் வந்த பின்னர் அதற்கு மேல் அங்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று கேட்டார். ஆனால் நான் அவரை சமாதானம் செய்து, இல்லை… ஒரு பத்து நிமிடம் இரண்டாம் பாதியை கேளுங்கள்.. உங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னேன் ஆனால் விஜய் மிகவும் கறாராக இல்லை. இந்த கதையில் நான் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
இதையடுத்து படத்தை நான் விஷாலை வைத்து எடுத்தேன். படம் வெளியாகி மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஆனது. அதனைத்தொடர்ந்து பார்ட்டி ஒன்றில் நான் கலந்து கொண்டேன். அந்த பார்ட்டியில் பல முக்கியமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதில் விஜய் சாரும் கலந்து கொண்டார். தொலைவில் நான் நிற்பதை பார்த்த விஜய் சார் என்னிடம் வந்து.. அண்ணா படம் சூப்பராக இருந்தது என்றார். ஆனால் எனக்கு விஜய் மீது இந்த படத்தில் நடிக்கவில்லையே என்று உள்ளூர ஒரு கோபம் இருந்தது. உடனே நான் நீங்கள் தான் பாதிக்கு மேலே கதையைக் கேட்கவே இல்லை என்று கடிந்தேன். உடனே விஜய் சார் இல்லைன்னா.. இதுதான் சரியானது; திரைத்துறைக்கு இந்த மாதிரியான ஒருவன் வர வேண்டும் என்று இருந்திருக்கிறது என்று சொன்னார்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்