தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar : அஜித்தின் அடுத்த படத்தின் முதல் நாளிலேயே ஆவேசமான அடிதடி.. தல.. க்கு என்ன ஆச்சு.. விடாமுயற்சி சாத்தியமா!

Ajith Kumar : அஜித்தின் அடுத்த படத்தின் முதல் நாளிலேயே ஆவேசமான அடிதடி.. தல.. க்கு என்ன ஆச்சு.. விடாமுயற்சி சாத்தியமா!

Pandeeswari Gurusamy HT Tamil
May 12, 2024 01:33 PM IST

Ajith Kumar : இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் படமான Good bad ugly என்ற திரைப்படத்தை உடனடியாக தொடங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்து இருப்பதாக கூறி உள்ளதாக சுத்தர் தெரிவித்துள்ளார். இந்த படம் ஜப்பான் மற்றும் சீனாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்தின் முதல் நாளிலேயே ஆவேசமான அடிதடி.. தல.. க்கு என்ன ஆச்சு.. விடாமுயற்சி சாத்தியமா!
அஜித்தின் அடுத்த படத்தின் முதல் நாளிலேயே ஆவேசமான அடிதடி.. தல.. க்கு என்ன ஆச்சு.. விடாமுயற்சி சாத்தியமா!

ட்ரெண்டிங் செய்திகள்

வீ கே சுந்தர் அப்டேட்ஸ் என்ற யூடியூப் சேனலில் அஜித் பிறந்த நாளையொட்டி அஜித் ரசிகர்களுக்கு பல்வேறு தகவல்களை பிறந்த நாள் பரிசாக பகிர்ந்து உள்ளார். இவர் அஜித்தின் நீண்டகால நண்பர் என்பதால் இவர் சொல்ல கூடிய பல வகையான தகவல்கள் ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

விடாமுயற்சி சூட்டிங் தள்ளி வைப்பு

இந்நிலையில் இயக்குநர் மகிழ்திருமேனி அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைஜானில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் தமிழகம் திரும்பிய படக் குழுவினர் மீண்டும் தேர்தல் முடிந்த பிறகு ஷூட்டிங் கிளம்ப திட்டமிருந்தது. ஆனால் அனைத்து தரப்பு நடிகர்களையும் ஒருங்கிணைப்பதிலும் பருவ காலம் சரியாக இல்லாததாலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அஜித் அவர்களின் அடுத்த படமாக அறிவிக்கப்பட்டுள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் படமான Good bad ugly என்ற திரைப்படத்தை உடனடியாக தொடங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்து இருப்பதாக கூறி உள்ளதாக சுத்தர் தெரிவித்துள்ளார்.

இந்த படம் ஜப்பான் மற்றும் சீனாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுபகுதி மட்டுமே இங்கு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி ரிலீஸ்!

இந்த படத்தை ஆரம்பித்து விட்டு கிடைக்கும் இடைவெளியில் விடாமுயற்சி திரைப்படம் முடிக்கப்பட்டு விரைவில் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறி உள்ளார். அவர்கள் கூறி உள்ளதை வைத்து இந்த ஆண்டு தசரா விடுமுறை அல்லது தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் விடா முயற்சி படம் வெளிவர வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

"தல" என்ற பெயரில் அழைக்கப்படும் அஜித் ரசிகர்களுக்கு அவர் படத்தை பற்றி தகவல்கள் வந்தாலே போதும். திருவிழா போல கொண்டாடி தீர்த்து விடுவார்கள். ஆனால் இந்த முறை அவர் நடித்து வரும் விடாமுயற்சி ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்தே காலதாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது. அதேபோல் முக்கிய பிரபலமான நடிகர்கள் ஒரு நேரத்தில் ஒரு படம்தான் நடிக்கின்றனர். 

அந்த படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பு வெளியாகும் . ஆனால் இந்த முறை அஜித் விசயத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடாமுயற்சி சூட்டங் நடைபெறும் போதே Good bad ugly என்ற பெயரில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிக்கை அஜித் ரசிகர்களுக்கு கொண்டாடும் வகையில் இருந்தாலும் விடாமுயற்சி என்ன ஆனது என்று குழம்பி போனார்கள். 

விடாமுயற்சி வெளியீட்டு தேதியே தெரியாத போது good bad ugly திரைப்படம் 2025 பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் என்று அறிவித்து விட்டனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த பத்திரிகை யாளரும் சினிமா வட்டாரத்தில் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவருமான வி.கே.சுந்தர் அவர்கள் அஜித் ரசிகர்களுக்கு சில அப்டேட் களையும் தந்து உற்சாகப்படுத்தி வந்தார். அவர் மீண்டும் தனது வீடியோவில் அஜித் அவர்களுக்கு பிடித்தமான ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்க பட்டுள்ள அரங்கில் ஆவேசமான சண்டை காட்சிகள் அடங்கிய ஆக்சன் சீக்குவன்சியோடு Good bad ugly சூட்டிங் ஆரம்பித்து விட்டது என்று தெரிவித்துள்ளார். 

இருபது நாட்கள் இந்த செடியூல்ட் போகும் என்றும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விடாமுயற்சி மீதான ஆரம்பித்து மிக விரைவாக படப்பிடிப்பு முடிந்து தீபாவளி பண்டிகை நாட்களில் விடாமுயற்சி கட்டாயம் வெளியாகும் என்று புதிய அப்டேட் கொடுத்து அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தந்து இருக்கிறார்.. எப்படியோ அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அடுத்தடுத்து தனது இரண்டு படங்களில் தங்களது ஹீரோ நடித்து வருவது நல்ல விசயம் தானே.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அஜித் சார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்