தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: ரசிகர்களை சந்திக்கிறாரா ரஜினிகாந்த்?.. உண்மை பின்னணி என்ன? வந்தது உடனடி விளக்கம்!

Rajinikanth: ரசிகர்களை சந்திக்கிறாரா ரஜினிகாந்த்?.. உண்மை பின்னணி என்ன? வந்தது உடனடி விளக்கம்!

Aarthi Balaji HT Tamil
May 16, 2024 10:47 AM IST

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்கள் சந்திப்பை நடத்துவார் என Whatsapp-ல் பரவும் செய்தி பொய்யானது, அதனை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரசிகர்களை சந்திக்கிறாரா ரஜினிகாந்த்?..  உண்மை பின்னணி என்ன? வந்தது உடனடி விளக்கம்!
ரசிகர்களை சந்திக்கிறாரா ரஜினிகாந்த்?.. உண்மை பின்னணி என்ன? வந்தது உடனடி விளக்கம்!

ட்ரெண்டிங் செய்திகள்

செஞ்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர், ரஜினிகாந்த் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்திப்பு நடக்க போகிறது என தகவல் பரப்பி வந்து உள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள், தலைவரை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் மிகவும் உற்சாகத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் அந்த செய்தி, முற்றிலும் பொய்யான தகவல்  என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பக்கத்தில் இருந்து விளக்கம் கிடைத்து இருக்கிறது.

முற்றிலும் பொய்யான தகவல்

இது தொடர்பாக ரியாஸ் அகமது வெளியீட்டு இருக்கும் பதிவில் , “ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்கள் சந்திப்பை நடத்துவார் என்று சமூக ஊடகங்களில் செஞ்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் ரசிகர்கள் உள்ள What' s App தளத்தில் நேற்று பகிர்ந்து உள்ளார். 

இது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். பகிர்வதற்கு முன், தகவலின் நம்பகத்தன்மையை தயவு செய்து சரி பார்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் தலைவரின் அனுமதி இல்லாமல் இது போன்ற செய்தியை பகிர வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஜெய் பீம் பட இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இறுதிகட்ட படப்பிடிப்பில் மலையாள நடிகர் ஃபகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகியோரும் பங்கேற்று உள்ளனர்.

வேட்டையன் பட குழு

மஞ்சு வாரியர் கதையின் நாயகி கதாதபாத்திரத்தில் நடிக்கிறார். ரித்திகா சிங், துஷார விஜயன், ரக்‌ஷன் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரஜினிகாந்தின் 171 ஆவது படம்

 ரஜினிகாந்தின் 171 ஆவது படம் குறித்த போஸ்டரை மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டது. அதில் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தின் டைட்டிலை, ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்து இருந்தது. அப்போது வெளியிடப்பட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கோல்டு கைக்கடிகாரங்களை, விலங்குபோல் மாட்டி, கூலிங் கிளாஸ் அணிந்து சிரித்த முகத்துடன் இருக்கிறார். அந்த ஸ்டில் ரசிகர்கள் பலரை ஈர்த்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்