Nani son Arjun: ரீ ரிலிஸ் ஆன ‘ஜெர்சி’; நரப்புகளை புடைக்க வைத்த அனிருத்; உணர்ச்சிவசப்பட்ட மகன்; நெகிழ்ந்த நானி! - வீடியோ!-nani son arjun has an adorable reaction to seeing him on screen in jersey - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nani Son Arjun: ரீ ரிலிஸ் ஆன ‘ஜெர்சி’; நரப்புகளை புடைக்க வைத்த அனிருத்; உணர்ச்சிவசப்பட்ட மகன்; நெகிழ்ந்த நானி! - வீடியோ!

Nani son Arjun: ரீ ரிலிஸ் ஆன ‘ஜெர்சி’; நரப்புகளை புடைக்க வைத்த அனிருத்; உணர்ச்சிவசப்பட்ட மகன்; நெகிழ்ந்த நானி! - வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 21, 2024 05:16 PM IST

மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆன நிலையில், இந்தத்திரைப்படம் நேற்று ரீ ரிலிஸ் செய்யப்பட்டது.

Nani watched the re-release of Jersey with his son Arjun.
Nani watched the re-release of Jersey with his son Arjun.

தன்னுடைய மனைவி அஞ்சனா மற்றும் மகன் அர்ஜூனுடன் திரையரங்கிற்கு சென்ற நானி!

 

மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆன நிலையில், இந்தத்திரைப்படம் நேற்று ரீ ரிலிஸ் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் நடிகர் நானி தன்னுடைய மனைவி அஞ்சனா மற்றும் மகன் அர்ஜூனுடன் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்தார். 

ஹைதராபாத்தில் உள்ள சுதர்சன் 35 எம்.எம் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்ற அவர்களை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். 

 

அர்ஜூன் மீண்டும் வானத்தில் இருந்து வந்து, பயணத்தை அனுபவித்து விட்டு, மீண்டும் சென்றது போல உணர்ந்தேன் - நானி பதிவு 

நானியின் மகன் அர்ஜூனை பார்த்த அவர்கள், அர்ஜூன்… அர்ஜூன் என்று கத்தினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்னொரு வீடியோவில், படத்தில் நானி இண்ட்ரோ காட்சியைப் பார்த்த அவரது மகன் அர்ஜூன், உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்று பார்த்தான். அதனை நானி அமைதியாக உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருந்தார். இந்த வீடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து நானி தன்னுடைய எக்ஸ் தளத்தில், “ இன்று அர்ஜூன் மீண்டும் வானத்தில் இருந்து வந்து, பயணத்தை அனுபவித்து விட்டு, மீண்டும் சென்றது போல உணர்ந்தேன். என்னுடைய இதயம் முழுக்க அன்பால் நிறைந்து கனத்து விட்டது” என்று பதிவிட்டு இருக்கிறார். 

நானிக்காக தீம் பாடலை வாசித்த மகன் அர்ஜூன்

 

இசை மீதான தனது காதலை ஒளிரச் செய்த அனிருத்திற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் - நானி மனைவி!

நானியின் மனைவியான அஞ்சனா, திரையிடலுக்கு முன்னதாக, நானிக்கு மகன் அர்ஜூன் பியானோ வாசிக்கும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில் அர்ஜூன் ஜெர்ஸி படத்தின் தீம் பாடலை வாசித்தான். 

மேலும் அதில், அர்ஜூன் நேற்றுதான் ஜெர்சி தீம் பாடலைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான். அதை பதிவிட இதைவிட சரியான நேரத்தை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த இரண்டு அர்ஜூன்களும் என்னை பெருமையால் நிரப்புகின்றனர். 

இசை மீதான தனது காதலை ஒளிரச் செய்த அனிருத்திற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்!” என்று பதிவிட்டு இருந்தார். 

திரையிடலுக்கு பின்னதாக பதிவிட்ட அவர், "இன்று எனக்கு மிகவும் பிடித்த படமான "ஜெர்சி” 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை கொண்டாடினேன். நேற்று இரவு, நாங்கள் சில காட்சிகளைப் பார்த்தோம், பல முறை பார்த்த போதிலும், அது இன்னும் என்னை எவ்வளவு நகர்த்துகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 

 

நாளை இல்லை என்பது போல, அர்ஜுன், சாரா மற்றும் நானியை உற்சாகப்படுத்தி தியேட்டரில் பார்த்த அனுபவம் இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது.” என்று பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.