Kabzaa OTT Release: ஓடிடியில் கப்சா எப்போது வருகிறது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kabzaa Ott Release: ஓடிடியில் கப்சா எப்போது வருகிறது?

Kabzaa OTT Release: ஓடிடியில் கப்சா எப்போது வருகிறது?

Aarthi V HT Tamil
Mar 17, 2023 01:27 PM IST

கப்சா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கப்சா ஓடிடி
கப்சா ஓடிடி

கேஜிஎஃப் படத்திற்கு பிறகு கன்னடத்தில் அந்தளவுக்கு ஆர்வத்தை கிளப்பிய படம் இதுவாகும். இன்னும் சொல்லப்போனால், இந்தப் படத்தின் ட்ரைலர் வெளிவந்தபோது, ​​கேஜிஎஃப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட இன்னொரு படத்தைப் போன்றே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்திற்கு கே.ஜி.எஃப் படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்து இருக்கிறார்.

இந்நிலையில் கப்சா படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ஃபிரைம் வீடியோ நிறுவனம் ரூ.150 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஆர். சந்துரு இயக்கிய இந்தப் படம், ஏப்ரல் 13-ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது. உபேந்திரா, ஷிவ் ராஜ்குமார், கிச்சா சுதீப், ஷ்ரியா சரண் போன்ற மூத்த நடிகர்கள் நடித்துள்ள கப்சா திரைப்படம் இந்திய அளவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

கப்சா திரைப்படம் 1942 மற்றும் 1986 க்கு இடையில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாகும். ஒரு சிறிய கேங்ஸ்டர் எப்படி பெரிய டான் ஆகிறான் என்பதே இந்த படத்தின் முக்கிய கதைக்களம். சொல்லப்போனால் இந்தக் கதையைக் கேட்டாலோ, டிரைலரைப் பார்த்தாலோ கேஜிஎஃப் நினைவுக்கு வருவது உறுதி. அந்த படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால், அவற்றின் தாக்கம் இந்தப் படத்தில் இருந்திருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கப்சா கப்சா ஓடிடிதிரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.