தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gatta Kusthi: ரூ.30 கோடி வியாபாரம் செய்த கட்டா குஸ்தி

Gatta Kusthi: ரூ.30 கோடி வியாபாரம் செய்த கட்டா குஸ்தி

Aarthi V HT Tamil
Dec 08, 2022 09:11 AM IST

கட்டா குஸ்தி திரைப்படம் தற்போது வரை ரூ.30 கோடி வசூல் செய்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் கட்டா குஸ்தி பட வெற்றியை  படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து கொண்டாடினர்.

அதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, செல்லா அய்யாவு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய விஷ்ணு விஷால், “எனக்கு வியாபாரம் இல்லை என்று ஒன்பது திரைப்படங்கள் கைநழுவி சென்றன. ஆனால் இன்று கட்டா குஸ்தி திரைப்படம் இதுவரை மட்டும் அனைத்து வகையான வியாபாரத்தில் 30 கோடி ரூபாய் கடந்துள்ளது. 

இதற்கு இன்னும் வியாபாரம் உள்ளது. இதனால் தற்போது ஒன்பது திரைப்படங்கள் கையில் உள்ளன. இது மகிழ்ச்சியாக உள்ளது. எப்ஐஆர் படத்திற்கு பிறகு இது என்னுடைய இரண்டாம் வெற்றி

விஷ்ணு விஷால் என்ற நடிகனை ஆதரிப்பதற்காகவே, விஷ்ணு விஷால் என்ற தயாரிப்பாளர் உருவாகினான். 

நான் தயாரித்த எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்கள் வெற்றியடைந்து இருக்கிறது. இன்னும் வரும் திரைப்படங்களும் வெற்றியடையும். அதற்காக உழைத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்