Thalapathy 69: பற்றவைக்கும் எதிர்பார்ப்பு.. அடுத்தடுத்து படத்தில் இணையும் பிரபலங்கள்.. குஷியில் ரசிகர்கள்..
Thalapathy 69: தளபதி 69 படத்தில் நடிக்கும் மற்றோரு பிரபலம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தளபதி 69 படத்தில் மாஸ் நடிகையும், மாஸ் ஹீரோ ஒருவரும் நடிப்பதாக கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சினிமாவிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் தளபதி 69 பலரின் எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளது. இதனை படம் வெளிவரும் வரை தக்க வைக்க எண்ணிய தயாரிப்பு நிறுவனம், தளபதி 69 படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இன்று தளபதி 69 படத்தில் இணையும் பிரபலங்களை வரிசையாக அறிவித்து வந்த வண்ணமாகவே உள்ளது.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை தெரிவித்தபோது தமிழ் சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கப்போவதாக அறிவித்தார். அப்போது இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் தனது 69வது படமே தனது கடைசி படம். அதன்பின் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் நடிப்பதில் இருந்து முவுவதுமாக விலகுவதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விஜய்யின் 69 ஆவது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததது.
ரசிகர்கள் ஹாப்பி
இந்நிலையில் நடிகர் விஜய்யின் 69வது படம் குறித்த அறிவிப்புகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்போது படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் என்றும் படத்திற்கு அனிருத் இசை அமைப்பார் என்றும் கூறப்பட்டது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.