Top Cinema News : நடிகர் விஜய், அஜித் படத்தின் புதிய அப்டேட்.. CWC-யில் விலகிய மணிமேகலை.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!-actor vijay ajith new update manimekalai quits cwc today top cinema news - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Cinema News : நடிகர் விஜய், அஜித் படத்தின் புதிய அப்டேட்.. Cwc-யில் விலகிய மணிமேகலை.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Top Cinema News : நடிகர் விஜய், அஜித் படத்தின் புதிய அப்டேட்.. CWC-யில் விலகிய மணிமேகலை.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Divya Sekar HT Tamil
Sep 15, 2024 07:26 AM IST

Top 10 Cinema News : நடிகர் விஜய் நடிக்கும் 69ஆவது படம் அப்டேட், ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட், பெண் குழந்தைக்கு அம்மாவான சீரியல் நடிகை ரித்திகா என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்.

Top Cinema News : நடிகர் விஜய், அஜித் படத்தின் புதிய அப்டேட்.. CWC-யில் விலகிய மணிமேகலை.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Top Cinema News : நடிகர் விஜய், அஜித் படத்தின் புதிய அப்டேட்.. CWC-யில் விலகிய மணிமேகலை.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!

‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட்

Ajith: நடிகர் அஜித் புதிதாக நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம், ‘குட் பேட் அக்லி’. இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

பாராட்டை பெறும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்குனராக தமிழில் 3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் உதவி இயக்குனர்களின் வாரிசுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்து முதற்கட்டமாக ரூ.5 லட்சத்தை வழங்கினார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படம்

ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ ஸ்டூடியோஸ், நீலாத்ரி புரொடக்ஷன்ஸ், ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ரமேஷ் வர்மா கிலாடி, வீரா உள்ளிட்ட சில ஹிட் படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி

தமிழ் சினிமாவில் இதுவரை அப்படி எதுவும் நடக்காததால், ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி இங்கே தேவைப்படவில்லை. நம் திரையுலகம் நன்றாகத்தான் உள்ளது என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சார்’ படத்தின் ‘படிச்சிக்கிறோம்’ பாடல் வெளியானது!

போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. திரைப்படத்தின் அடுத்த பாடலான `படிச்சிக்கிறோம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்பாடலை பத்ம பிரியா மற்றும் மற்றும் பிரார்தனா ஸ்ரீராம் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலிற்கு விவேகா வரிகளை எழுதியுள்ளார்.

பெண் குழந்தைக்கு அம்மாவான சீரியல் நடிகை ரித்திகா!

சீரியல் நடிகை ரித்திகா கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அவரின் வளைகாப்பு புகைப்படங்கள் கூட வெளியாகி வைரலானது. இதனிடையே ரித்திகாவிற்கு கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்து உள்ளது. இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை !

தான் பெரிதும் நேசித்த குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறேன் எனவும், அனைத்தையும் விட சுயமரியாதை முக்கியம் எனவும் குக் வித் கோமாளி சீசன் 5 தொகுத்து வழங்கும் மணிமேகலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார். இதுதொடர்பாக டிவி தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், குறிப்பாக தொகுப்பாளராக இருக்கும் ஒருவர் இந்த குக் வித் கோமாளி சீசன் 5ன் படி, நிகழ்ச்சியின் சமையல்காரராக செயல்பட வேண்டும். ஆனால், அவர் அதை அடிக்கடி மறந்து விடுகிறார். வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்யவிடாமல் தடுத்து, எனது ஆங்கரிங் என்னும் நெறியாள்கையில் குறுக்கிடுகிறார்.என டிவி தொகுப்பாளினி மணிமேகலை கூறியிருக்கிறார்.

வைரமுத்து மீது பாடகி சுசித்ரா பகிரங்க குற்றச்சாட்டு!

பிரபல பாடகியும் நடிகையுமான சுசித்ரா சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வைரமுத்துவை பொறுத்த வரைக்கும் பாடகிகளை தான் முதலில் குறி வைப்பார். அதிலும் நான் மே மாதம் 98 பாடலை பாடியிருக்கிறேன். அந்தப் பாடலைக் கேட்ட பிறகு எனக்கு எனக்கு போன்செய்து 'உன் பாடலில் காமம் இருக்கிறது. ஒரு காதல் இருக்கிறது. உன்னுடைய வாய்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது.' இப்படித்தான் அவர் வலையில் விழ வைப்பாராம். அந்தப் பாடலில் காதல் இருக்கிறது என்றால், அதில் ஆடிய ரீமாசென்னைப் பார்த்து காதல் வரலாம். அந்தப் பாட்டைப் பற்றி அவ்வளவு பெருமையாக கூறும்போதே நமக்கு தெரிந்துவிடும், ஏதோ ஒன்னுக்கு இவர் ஆசைப்படுகிறார் என” என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.