Bobby Deol: தளபதி 69 படத்தில் அனிமல் நடிகர்..இன்ஸ்டாவில் எமோஜியுடன் ஸ்டோரி பகிர்ந்து ரியாக்சன்-bobby deol super excited to star in vijays final film thalapathy 69 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bobby Deol: தளபதி 69 படத்தில் அனிமல் நடிகர்..இன்ஸ்டாவில் எமோஜியுடன் ஸ்டோரி பகிர்ந்து ரியாக்சன்

Bobby Deol: தளபதி 69 படத்தில் அனிமல் நடிகர்..இன்ஸ்டாவில் எமோஜியுடன் ஸ்டோரி பகிர்ந்து ரியாக்சன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 01, 2024 09:20 PM IST

தளபதி 69 படத்தில் அனிமல் நடிகர் பாபி தியோல் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர் சூர்யாவின் கங்குவா படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

Bobby Deol: தளபதி 69 படத்தில் அனிமல் நடிகர்..இன்ஸ்டாவில் எமோஜியுடன் ஸ்டோரி பகிர்ந்து ரியாக்சன்
Bobby Deol: தளபதி 69 படத்தில் அனிமல் நடிகர்..இன்ஸ்டாவில் எமோஜியுடன் ஸ்டோரி பகிர்ந்து ரியாக்சன்

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து எந்த தகவலும் வெளியாகிவில்லை. இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர்

தளபதி 69 படத்தில் பாலிவுட் நடிகரான பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் எக்ஸ் பக்கத்தில் அதிகாராப்பூர்வாக அறிவித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கும் நிலையில், தற்போது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை நடிகர் பாபி தியோலும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், " இந்த படத்தில் இணைவதில் உற்சாகமாக உள்ளேன் என்று ஹார்ட் எமோஜியுடன்" குறிப்பிட்டுள்ளார்.

தளபதி 69 படத்தை அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது. 

இந்த படத்துக்கு பின்னர் 2026இல் தமிழ்நாட்டில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட இருப்பதால், நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.

கங்குவா படத்தில் வில்லனாக பாபி தியோல்

பாலிவுட் சினிமாவில் ஹீரோவாக இருந்து வரும் பாபி தியோல், கடந்த ஆண்டு ரன்பிர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். வாய் பேச முடியாத கேரக்டரில் தோன்றியிருக்கும் அவர் சிறிது நேரம் தோன்றினாலும் வில்லனத்தனத்தில் மிரட்டியிருப்பார்.

சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் கங்குவா படத்திலும் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது. இதுதவிர தெலுங்கி பவன் கல்யாண் நடிக்கும் ஹரி ஹர வீர மல்லு, பாலகிருஷ்ணா நடிக்கும் என்பிகே 109 ஆகிய படங்களிலும் நடிக்கிறார்.

விஜய் சினிமா மற்றும் அரசியல் பயணம்

1992இல் வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான தளபதி விஜய் தற்போது கோலிவுட் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து வருகிறார். சுமார் மூன்று தசாப்தங்களாக பல்வேறு வெற்றி படங்களை கொடுத்திருக்கும் தளபதி விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது, தான் நடித்து வரும், கமிட்டாகியிருக்கும் படங்களை நடித்து முடித்த பின்னர் அரசியலில் முழு கவனம் செலுத்தபோவதாக தெரிவித்தார். அத்துடன் எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே, தளபதி விஜய் நடித்து வந்த தி கோட் திரைப்படம் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலை பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னர் அவர் நடிக்கும் படமாக தளபதி 69 உருவாகிறது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியருக்கும் இந்த படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் ட்ரெண்டாகி வருகிறது. அதன்படி தற்போது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடிக்கும் விஷயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.