தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Mamitha Baiju Dance Video In Marriage Ceremony Gets Viral On Net

Mamitha Baiju: திருமண நிகழ்வில் பிரேமலு நடிகை மமிதா பைஜு அசத்தல் டான்ஸ்! வைரலாகும் விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2024 08:54 AM IST

90ஸ் கிட்களின் பிரபலமான கிரேசி பிராக் மியூசிக்குக்கு வெஸ்டர்ன் மற்றும் கிளாசிக்கல் கலந்து பிரேமலு படப் புகழ் நடிகை மமிதா பைஜு நடனமாடும் விடியோ வைரலாகியுள்ளது.

வைரலாகும் நடிகை மமிதா பைஜு டான்ஸ் விடியோ
வைரலாகும் நடிகை மமிதா பைஜு டான்ஸ் விடியோ

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து பிரேமலு படம் தமிழில் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் கடந்த இரு நாள்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பிரேமலு ரிலீசுக்கு பின் மமிதா பைஜுதொடர்பான ஏதாவதொரு செய்தி தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்து வருகிறது.

மமிதா டான்ஸ் விடியோ

இதையடுத்து திருமண நிகழ்வு ஒன்றில் நடிகை மமிதா பைஜு நடனமாடும் விடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. 90ஸ்களில் பிரபலமான கிரேசி பிராக் பாடலின் மியூசிக் பின்னணியில் ஒலிக்க மமிதா மாடர்ன், கிளாச்சிகல் இரு விதமான நடன அசைவுகளாலும் நடனமாடி பார்ப்பவர்களை கொள்ளை கொண்டுள்ளார்.

 

மமிதா பைஜு தமிழ் படம்

ரசிகர்களின் லேட்டஸ்ட் கனவுக்கன்னியாக மாறியிருக்கும் மமிதா பைஜு தமிழில் ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்து ரெபல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வாரம் பிரேமலு தமிழ் ரிலீஸ், அடுத்த வாரம் ரெபல் ரிலீஸ் ஆகியவை தமிழ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

எஸ்எஸ் ராஜமெளலி வாழ்த்து

பிரேமலு படத்தின் சகஸஸ் மீட் ஹைதராபாத்தில் நடந்த நிலையில், படத்தில் ஹீரோயின் மமிதா பைஜு நடிப்பு அற்புதமாக இருந்ததாக பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி பாராட்டுகளை தெரிவித்தார். இவர் இளைஞர்களின் கிரஷ் ஆக மாறுவார் எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்த அவர், அவரது கதாபாத்திரம் சாய்பல்லவி மற்றும் 1989இல் வெளிவந்த கீதாஞ்சலி படத்தில் நடித்தை கிரிஜாவை நினைவுபடுத்துவதாக கூறினார்.

ராஜமெளலி கூறியது போல், தற்போது இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகவே மமிதா உருவெடுத்திருக்கிறார்.

பிரேமலு தெலுங்கு பதிப்பு கடந்த 8ஆம் தேதி வெளியாக, தெலுங்கிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தி கிரிஷ் ஏடி இயக்கியுள்ளார்.

பிரேமலு திரைப்படம்

ரொமாண்டிக் காமெடி படமான பிரேமலு பிப்ரவரி 9ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது. கே.கஃபூர், சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், ஷமீர் கான் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்துக்கு கிடைத்த வரவேற்பு, பாக்ஸ் ஆபிஸ் வசூல் காரணமாக தெலுங்கு மற்றும் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்ப்டடுள்ளது. தெலுங்கில் ஏற்கனவே வெளியாகவிட்ட நிலையில் தமிழி பதிப்பு இன்று வெளியாகிறது.

வசூல் சாதனை

பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் புதுமுக நடிகர்கள் நடித்து வெளியாகியிருக்கும் பிரேமலு திரைப்படம் ரூ.. 110 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியள்ளது. அத்துடன் இந்த படம் மார்ச் 29ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்