தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Priya Mani: பன்மொழியில் பிரபல நடிகை.. நம்ம பருத்திவீரன் தந்த விலாசம்.. முத்தழகு பிரியாமணிக்கு ஹேப்பி பர்த் டே

HBD Priya Mani: பன்மொழியில் பிரபல நடிகை.. நம்ம பருத்திவீரன் தந்த விலாசம்.. முத்தழகு பிரியாமணிக்கு ஹேப்பி பர்த் டே

Marimuthu M HT Tamil
Jun 04, 2024 06:25 AM IST

- HBD Priya Mani: நடிகை பிரியாமணி தனது 40ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவர் திரைத்துறையில் பருத்திவீரன் படத்தில் இருந்து ஜவான் வரை பயணித்ததைப் பற்றி பேசுகிறது கட்டுரை

HBD Priya Mani: பன்மொழியில் பிரபல நடிகை.. நம்ம பருத்திவீரன் தந்த விலாசம்.. முத்தழகு பிரியாமணிக்கு ஹேப்பி பர்த் டே
HBD Priya Mani: பன்மொழியில் பிரபல நடிகை.. நம்ம பருத்திவீரன் தந்த விலாசம்.. முத்தழகு பிரியாமணிக்கு ஹேப்பி பர்த் டே

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்த பிரியாமணி?:

பிரியா மணி கர்நாடகாவின் பெங்களூருவில் 1984ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 4ஆம் தேதி பிறந்தவர். ஆனால், இவரது பூர்வீகம், கேரளாவின் பாலக்காடு ஆகும். இவரது தந்தை வாசுதேவன் மணி ஐயர் தோட்டச்செடிகள் தொடர்பான பிசினஸில் இருந்தார். மேலும், இவரது தாய் லதா மணி, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மற்றும் ஒரு தேசிய வங்கியில் மேனேஜர்.

பிரியாமணி, தனது பள்ளிப்படிப்பை பெங்களூருவில் உள்ள ஸ்ரீ அரபிந்தோ நினைவு பள்ளியிலும், பிஸப் காட்டன் மகளிர் கிறிஸ்தவப் பள்ளியிலும் படித்தார்.

பிரியாமணி தனது 12ஆம் வகுப்பில், காஞ்சிபுரம் சில்க்ஸ், ஈரோடு பரணி சில்க்ஸ் மற்றும் லட்சுமி சில்க்ஸ் போன்ற விளம்பரங்களில் நடித்தார். அப்போது தமிழின் உச்ச இயக்குநர் பாரதிராஜா, ‘கண்களால் கைது செய்’ என்னும் படத்தில் இவரை கதாநாயகியாக அறிமுகப் படுத்துகிறார்.

தனது பள்ளிப் படிப்புக்குப் பின்பு, இளங்கலை முதுகலைப் படிப்பைப் படித்துக்கொண்டே, சில விளம்பரங்களிலும் படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு மற்றும் ஐந்து மொழிகள் சரளமாகப் பேச வரும்.

பிரியாமணி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் முஸ்தஃபா ராஜ் என்கின்ற தனது நீண்ட கால நண்பரை, 2017ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி மணந்தார்.

சினிமா வாழ்க்கை:

பிரியாமணி, சினிமாவில் ‘எவரே அடகாடு’ என்னும் தெலுங்கு படம் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில் இவரது முதல் படம், ‘கண்களால் கைது செய்’. பின், மலையாளத்தில் ‘சத்யம்’ என்னும் படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின், 2005ஆம் ஆண்டு, பாலுமகேந்திராவின் இயக்கத்தில் ‘அது ஒரு கனா காலம்’ படத்தில் நடித்தார். பின் அமீரின் பருத்திவீரன் 2007ஆம் ஆண்டு ரிலீஸானது. அப்போது முத்தழகு என்னும் ரோலில் கதாநாயகியாக மிரட்டியிருந்தார், பிரியா மணி. இப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார், பிரியா மணி. அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் குறிப்பிடத்தக்க படங்களில் நடிக்கத் தொடங்கினார். 

அதைத்தொடர்ந்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரத்தொடங்கிய அவர், மலைக்கோட்டை, தோட்டா, ராவணன், திரைக்கதா, ராவன்(இந்தி) , சாருலதா உள்ளிட்டப் பல படங்களில் தன்னுடைய முத்திரையைப் பதித்தார்.

பிரியா மணியின் சம்பளம்:

ஒரு பேட்டியில் தனது முதல் சம்பளம் குறித்து பிரியாமணி கூறியிருந்தார் . அவரைப் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ​​'எனது முதல் சம்பாத்தியம் 500 ரூபாய் ஆகும். அதை நான் விலைமதிப்பற்றதாகக் கருதுகிறேன்' என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதே நேர்காணலில் அவர், ’மேக்கப் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க வேண்டும்’ என்றும் கூறினார்.

பிரியாமணி ' ராவன் ' மற்றும் ' ரக்த சரித்ரா 2 ' போன்ற பாலிவுட் படங்களில் முன்பே நடித்துள்ளார். ஆனால் அவர் மனோஜ் பாஜ்பாயுடன் 'தி ஃபேமிலி மேன்' வலைத்தொடரில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் பிரபலம் ஆனார். இந்தத் தொடருக்காக அவருக்கு 80 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியா மணி, ’’சென்னை எக்ஸ்பிரஸ்’’ படத்தில் ஷாருக்கானுடன் 'ஒன் டூ த்ரீ ஃபோர்' பாடலில் நடித்தார். 2023 ஆம் ஆண்டு வெளியான 'ஜவான்' திரைப்படத்தில் லட்சுமி என்னும் வேடத்தில் நடித்தார். இந்த ஹை-ஆக்டேன் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்திற்கு பிரியா மணி, 2 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி இருக்கிறார் .

தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் மைதான் படத்திலும் பிரியாமணி நடித்து இருக்கிறார். 

500 ரூபாயில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினாலும் ஒரு தேசிய விருது மற்றும் மூன்று ஃபிலிம் விருதுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல், கோடிகளில் சம்பளம் பெறும் ‘முத்தழகு’ என தமிழ் மக்களால் கொண்டாடப்படும் நடிகை பிரியாமணிக்கு இன்று 40ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ். 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்