Thalapathy 69 : தளபதி 69 படத்தில் யாரும் எதிர்பார்க்காத பிரபலம்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. யார் அந்த பிரபலம் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy 69 : தளபதி 69 படத்தில் யாரும் எதிர்பார்க்காத பிரபலம்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. யார் அந்த பிரபலம் தெரியுமா?

Thalapathy 69 : தளபதி 69 படத்தில் யாரும் எதிர்பார்க்காத பிரபலம்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. யார் அந்த பிரபலம் தெரியுமா?

Divya Sekar HT Tamil Published Oct 03, 2024 01:31 PM IST
Divya Sekar HT Tamil
Published Oct 03, 2024 01:31 PM IST

Thalapathy 69 : தளபதியை 69ஆவது திரைப்படத்தில் பிரபல இயக்குனர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

Thalapathy 69 : தளபதி 69 படத்தில் யாரும் எதிர்பார்க்காத பிரபலம்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. யார் அந்த பிரபலம் தெரியுமா?
Thalapathy 69 : தளபதி 69 படத்தில் யாரும் எதிர்பார்க்காத பிரபலம்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. யார் அந்த பிரபலம் தெரியுமா?

அரசியல் படமாக இருக்குமா

சதுரங்கவேட்டை’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான ஹெச்.வினோத், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கியதின் மூலம் கவனம் மிகு இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ ‘வலிமை’ ‘துணிவு’ உள்ளிட்ட படங்களை இயக்கி நட்சத்திர இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார்.

விஜய் அடுத்ததாக அரசியலுக்கு செல்ல இருப்பதால் இந்தப்படம் அரசியல் படமாக இருக்குமா என்ற கேள்விக்கு, இந்தப்படம் முழுக்க முழுக்க விஜயின் படமாக இருக்குமென்று ஹெச்.வினோத் கூறியிருந்தார்.

அனிருத் இசை

இந்நிலையில் நடிகர் விஜய்யின் 69வது படம் குறித்த அறிவிப்புகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்போது படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் என்றும் படத்திற்கு அனிருத் இசை அமைப்பார் என்றும் கூறப்பட்டது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் பெரும்பான்மையான பார்வையாளர்களுக்கு திரைப்படம் பிடித்திருப்பதால், படத்தின் வசூல் 500 கோடியை தாண்டி மெகாஹிட் அடித்திருக்கிறது.

பாலிவுட் பிரபலம் பாபி டியோல்

இந்நிலையில் தளபதி 69 படத்தின் அப்டேட்களை படக்குழு வெளியிடத் தொடங்கியுள்ளது. படத்தில் நடிக்கப்போகும் நடிகர் நடிகைகள் யார் யார் என்று நேற்று முன்தினம் முதல் அப்டேட் வெளியிடத் தொடங்கிய படக்குழு, பாலிவுட் பிரபலம் பாபி டியோல் தளபதி 69 படத்தில் களமிறங்குவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

பிரபல நடிகை பூஜா ஹெக்டே

இதையடுத்து நேற்று படத்தில் நடிக்கும் மற்றோரு பிரபலம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தளபதி 69 படத்தில், பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மமிதா பைஜூ

நேற்று படத்தில் நடிக்கும் மற்றொரு நபர் குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, பிரேமலு திரைப்படம் மூலம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் இழுத்த 2கே கிட்ஸ்களின் க்ரஷ் ஆன மமிதா பைஜூ நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தளபதி 69 படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன்

இந்நிலையில் இன்று தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தளபதி 69 படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் நடக்க இருப்பதை உறுதி செய்துள்ளது. தளபதியை 69ஆவது திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்பை கொடுத்திருக்கின்றது.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.