தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  27 Years Of Gnanapazham: நேர்மையான பத்திரிகையாளனின் காதலும் அதன்பிந்தைய காமெடி களேபரங்களும் தான்.. ஞானப்பழம்

27 years of Gnanapazham: நேர்மையான பத்திரிகையாளனின் காதலும் அதன்பிந்தைய காமெடி களேபரங்களும் தான்.. ஞானப்பழம்

Marimuthu M HT Tamil
Nov 15, 2023 05:15 AM IST

ஞானப்பழம் படம் ரிலீஸாகி 27 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

ஞானப்பழம் படம் ரிலீஸாகி 27 ஆண்டுகள் நிறைவு
ஞானப்பழம் படம் ரிலீஸாகி 27 ஆண்டுகள் நிறைவு

ட்ரெண்டிங் செய்திகள்

படத்தின் கதைக்கரு என்ன? ஆர்த்தி என்னும் பெரிய பணக்கார பெண், ஞானசூரியன் என்னும் நேர்மையான, சுய ஒழுக்கங்கள் நிரம்பிய ஒரு பத்திரிகையாளரை காதலிக்கிறார். ஞானசூரியன் ஞானப்பழம் என்னும் தினசரி பத்திரிகையை நடத்துகிறார். ஒருகட்டத்தில் தனது காதலன் ஞானசூரியனுக்காக, தனது சகோதரரின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் முடிக்கிறார், ஆர்த்தி. அதன்பின் ஏற்படும் பிரச்னைகளை சுவாரஸ்யம் குறையாமல் காமெடியாக சொன்ன படம் தான், ஞானப்பழம். இப்படத்தை ஆர்.பி. விஸ்வம் இயக்க, கதை வசனம் எழுதியிருப்பார், பாக்யராஜ்.

ஞானசூரியன் என்னும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் கே.பாக்யராஜூம், ஆர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் சுகன்யாவும் நடித்திருக்கின்றனர். ஞானசூரியனின் தாயாராக எஸ்.என். லட்சுமியும், ஆர்த்தியின் அண்ணனாக கவுண்டமணியும் நடித்திருக்கின்றனர். ஆர்த்தியின் கார் டிரைவராக செந்திலும், பார் ஓனராக மயில்சாமியும் நிர்மலாவாக நடிகை ரேகாவும் நடித்துள்ளனர். தக்காளி ஜோதி என்னும் கதாபாத்திரத்தில் நடிகை வினிதா நடித்துள்ளார்.

ரசிக்கும்படியான அம்சங்கள்:

  • இப்படத்தில் அரசியல்வாதிகளின் உண்மை முகங்களைத் தோலுரித்துக் காட்டும் பாக்யராஜுக்கு அதனால் ஏற்படும் பிரச்னைகள், தனிமனிதனாகப் போராடுபவை ஆகியவை ரசிக்கும்படியாகவுள்ளன
  • இப்படத்திற்குண்டான கதையினை எழுதிய பாக்யராஜ், இசையினையும் கையில் எடுத்து தானே இசை அமைத்துள்ளார். யாருமில்லாத தீவொன்று வேண்டுகிற என்னும் பாடல் ஈர்க்கிறது.
  • இப்படம் கவிஞர் பா.விஜய்யின் முதல் திரைப்படம். இப்படத்தில் கவிஞர் பா.விஜய் மூன்று பாடல்களை எழுதியுள்ளார். 
  • பத்திரிகை நடத்தும் பாக்யராஜ் தன் பத்திரிகையை பேருந்துகளில் ஏறி கூவி கூவி விற்கும்போது, சிரிப்பலையை உண்டு செய்கிறது.
  • படத்தின் மைனஸ்: கவுண்டமணி இருந்தும் காமெடி பெரியளவில் வொர்க் ஆகவில்லை.  திரைக்கதையில் இழுவை தெரிகிறது. இப்படம் IMDb-ல் 10க்கு 5.9 தான் பெற்றுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்