தமிழ் செய்திகள்  /  Elections  /  The Speaker's Office Has Announced That Former Minister Ponmudi's Tirukkoyilur Constituency Is Vacant

By Election: திருக்கோவிலூர் தொகுதி காலி! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்! விரைவில் இடைத் தேர்தலுக்கு வாய்ப்பு!

Kathiravan V HT Tamil
Mar 05, 2024 07:24 PM IST

“வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது”

முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

இதனை அடுத்து திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க கோரி கடந்த மார்ச் ஒன்றாம் தேதி அன்று அதிமுக சார்பில் சபாநாயகர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பொன்முடியின் தீர்ப்பு தொடர்பான முழு விவரம் நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை என்றும், வந்த உடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்கப்படும் என சபாநாயகர் செயலாளர் கூறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறி இருந்தார். 

இந்த நிலையில், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சபாநாயகர் அலுவலகம் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளது. 

இதே போல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அவர் வெற்றி பெற்ற விளவங்க்கோடு சட்டமன்றத் தொகுதி ஏற்கெனவே காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திமுக முன்னாள் அமைச்சரான பொன்முடி, கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த தேர்தலின் போது 59 ஆயிரத்து 680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp channel