தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Annamalai Vs Sellur Raju: ’அண்ணாமலை என்ன ஜோசியக்காரரா! அவரு ஜுஜுபிங்க!’ பங்கமாய் கலாய்க்கும் செல்லூர் ராஜு!

Annamalai vs Sellur Raju: ’அண்ணாமலை என்ன ஜோசியக்காரரா! அவரு ஜுஜுபிங்க!’ பங்கமாய் கலாய்க்கும் செல்லூர் ராஜு!

Kathiravan V HT Tamil
Apr 13, 2024 03:09 PM IST

“அதிமுக என்பது பீனிக்ஸ் பறவை மாதிரி, அண்ணாமலையின் கூற்று வேடிக்கையானது, நகைச்சுவையானது. கோவையில் தோல்வி பயத்தை மறைக்க இப்படி அவர் பேசி வருகிறார்”

செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரையில் வாழும் வட இந்தியர்களிடம் வாக்கு சேகரித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் வாழும் வடநாட்டு வணிகர் சங்கத்தில் 15 ஆயிரம் வடநாட்டு வாக்காளர்கள் உள்ளனர். அதிமுக வேட்பாளர் சரவணனுக்காக, அவர்களிடம் ஆதரவு கேட்டோம். அதிமுக ஆட்சியில் அமைதியாக தொழில் செய்தோம், எங்கள் ஒட்டுமொத்த வாக்குகளும் அதிமுகவுக்குதான் என்று சொல்லி உள்ளனர். 

கேள்வி:- அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித் ஷா சொல்லி உள்ளாரே?

அமித்ஷா ஏதோ ஒன்று பேச வேண்டும் என்று பேசுகிறார். 1967ஆம் ஆண்டில் இருந்து திராவிட இயக்கங்கள் ஆட்சியில் இருந்தது, அன்றைக்கு காங்கிரஸ் ஆட்சியில் உணவு பற்றாக்குறையால் எலிக்கறி சாப்பிடும் நிலை தமிழ்நாட்டில் இருந்தது, வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். எங்கள் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்தான் தமிழ்நாடு என்ற பெயர் வைத்தார். 

தமிழ்நாடு என்ற பெயர் வைத்த பிறகு திராவிட இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான் மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தானில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்கள் வளர்ச்சியில் தமிழ்நாடு பெரிய மாநிலமாக உள்ளது.  இலவச அரிசி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அம்மா அவர்கள் கொண்டு வந்தார்கள். நாங்கள் கட்டும் நிதியில்தான் குஜராத், பீகார், உபி போன்ற மாநிலங்களுக்கு பணம் தருகிறார்கள். தமிழ்நாட்டை காட்டிலும் அங்கு ஊழல் அதிகம் நடக்கிறது, ஊழலுக்காக திமுக ஆட்சிதான் கலைக்கப்பட்டது. 

கேள்வி:- ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசம் சென்றுவிடும் என அண்ணாமலை கூறி உள்ளாரே?

அண்ணாமலை என்ன ஜோசியக்காரரா? அவர் என்ன விசுவாமித்திரரா? அண்ணாமலை மத்தியில் ஆளும் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகுதான் அவரை தெரியும், அவருக்கு அரசியலே தெரியாது. அதிமுக என்பது பீனிக்ஸ் பறவை மாதிரி, அண்ணாமலையின் கூற்று வேடிக்கையானது, நகைச்சுவையானது. கோவையில் தோல்வி பயத்தை மறைக்க இப்படி அவர் பேசி வருகிறார். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அண்ணாமலை எங்கு இருப்பார்?, இந்த் அண்ணாமலை சூப்பர் ஸ்டார் கிடையாது, இது சுஜூபி, நான் அவரை கிழிகிழின்னு கிச்சிச்சிவிட்டேன். ரோட் ஷோன்னு அண்ணாமலை பிரதமரை கூட்டி வந்து ஒன்றும் இல்லை என்று ஆக்கிவிடார். பாண்டி பஜாரிலேயே அங்கு கூட்டம் இல்லை. அமித்ஷா நடத்திய மதுரை ரோட் ஷோவில் கடையில் டீ குடிப்பவன் கூட திரும்பி பார்க்கவில்லை. 

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

WhatsApp channel