தமிழ் செய்திகள்  /  Elections  /  Aiadmk General Secretary Eps's Response To Madurai Bjp Candidate Professor Srinivasan

EPS Vs BJP: ’டேய் உன்னை போல எத்தனை பேர பாத்து இருப்போம்!’ பாஜக சீனிவாசனை பிரித்து மேய்ந்த ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Mar 31, 2024 05:20 PM IST

”இந்த தேர்தலோடு உன்னை போல் வெற்று அரசியல் செய்யும் நபர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போய்விடுவீர்கள்”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - பாஜக வேட்பாளர் பேராசிரியர் சீனிவாசன்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - பாஜக வேட்பாளர் பேராசிரியர் சீனிவாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது பேசிய அவர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திமுக கம்பெனியின் முதலாளிகளாக உள்ளனர். ஆனால் அதிமுகதான் மக்களுக்காக எம்ஜிஆர் தோற்றுவித்த இயக்கம். அதிமுக என்ற கட்சி இல்லை என்றால் தமிழ்நாடு சர்வாதிகாரமாக மாறிவிடும். 

தேர்தல் நேரத்தில் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் என்னை பற்றியும், அதிமுகவை பற்றியும் திட்டமிட்டு அவதூறு செய்து வருகின்றனர். 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன், அதிமுக பொதுச்செயலாளர் என்பதை விட உங்களில் ஒருவன் என்பதில்தான் எனக்கு பெருமை. 

தலைவன் அடிக்கடி மாறுவான், ஆனால் தொண்டன் நிலையாக இருப்பான். தொண்டன் என்ன நினைக்கிறானோ அதை செயல்படுத்துவதுதான் என்னுடைய பணி. தமிழ்நாட்டை அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி எய்ததால்தான் இன்று முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகாலத்தில் எப்போது இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பலாம் என மக்கள் பேசுகிறார்கள். சேலத்தில் நேற்று பேசிய ஸ்டாலின் “அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி” என்று கூறி முழு பூசணிகாயை சோற்றில் மறைத்து பேசுகிறார். 

ஸ்டாலினுக்கு நாட்டு மக்களை பற்றி கவலையில்லை; அவருடைய வீட்டு மக்களை பற்றிதான் கவலை. திமுக இதோடு ஜெயிக்கப்போவதில்லை. அவரோடு முடிந்து போய்விட்டது. அடுத்து உதயநிதி ஸ்டாலினை முன்னிருத்த பார்க்கிறார்கள், இது என்ன மன்னர் ஆட்சியா?; திமுகவில் யாரும் மேலுக்கு வர முடியாது. 

ஸ்டாலினுக்கு பிறகு இவர்தான் திமுக தலைவர் என்று ஒருவரை சொன்னால் அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிடுவார்கள், ஆனால் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளராக வர முடியும். அதிமுகவில் அனைவரும் சரிசமமாக நடத்தப்படுவார்கள். 

திமுக ஆட்சியில் கஞ்சா விற்காத இடமே கிடையாது.நாங்கள் பாஜக உடன் கள்ள உறவு வைத்திருப்பதாக ஸ்டாலினும், உதயநிதியும் பேசுகிறார்கள், இதெல்லாம் உங்களுக்கு கை வந்த கலை. யாரை கண்டும் நாங்கள் பயப்படவில்லை; பாஜகவை கண்டு பயந்ததை போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டத்தை பாஜக கொண்டு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். 

மதுரையில் பாஜக பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் தன்னை அடையாளம் காட்டுவதற்காக ”2024 நாடாளுமன்றத் தேர்தல் உடன் அதிமுக காணாமல் போய்விடும்” என கூறி உள்ளார். ’நீ கண்டுபுடிச்சு குடு; டேய் உன்னை போல எத்தனை பேர பாத்தவங்க அதிமுக!’

நான் உட்பட மேடையில் உள்ள அத்தனை பேரும் 50 ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்தவர்கள். உன்னை போல் சொகுசு வாழ்கை நடத்துபவர்கள் அல்ல; உங்களை போல் வெற்று விளம்பரத்தில் நாங்கள் அரசு நடத்தவில்லை. தமிழ்நாட்டிலேயே அதிக தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுகதான். 

இந்த தேர்தலோடு உன்னை போல் வெற்று அரசியல் செய்யும் நபர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போய்விடுவீர்கள். 1998ஆம் ஆண்டு பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்தோம். பாஜக சின்னத்தை அம்மா அவர்கள் அடையாளம் காட்டினார்கள். பாஜகவின் அடையாளத்தையே அதிமுகதான் காட்டியது. 

நான் ஒரு விவசாயி, விவசாயிகளின் கஷ்டம் எனக்கு தெரியும். அதிமுக ஆட்சி இருந்தவரை என்.எல்.சியில் நிலம் எடுக்க அனுமதிக்கவில்லை. விவசாயிகள் நிலங்களை எடுக்கும் நிலை வரும்போது அதை நாங்கள் தடுப்பு நிறுத்தினோம்.

WhatsApp channel