தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Dc Vs Srh Result: நான்கு விக்கெட்டுகளை கழட்டிய யார்க்கர் மன்னன் நடராஜன்! எடுபடாத டெல்லி கேபிடல்ஸ் அதிரடி

DC vs SRH Result: நான்கு விக்கெட்டுகளை கழட்டிய யார்க்கர் மன்னன் நடராஜன்! எடுபடாத டெல்லி கேபிடல்ஸ் அதிரடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 20, 2024 11:25 PM IST

சன் ரைசர்ஸ் பாணியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் அதிரடியான தொடக்கத்தை தந்தது. ஆனால் யார்க்கர் மன்னன் நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்து டெல்லி பேட்ஸ்மேன்களை நன்கு கட்டுப்படுத்தியதுடன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்ட டெல்லி பேட்ஸ்மேன் மெக்குர்க், நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய நடராஜன்
பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்ட டெல்லி பேட்ஸ்மேன் மெக்குர்க், நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய நடராஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் 7 போட்டிகளில் 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலும், சன் ரைசர்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றியுடன் 4வது இடத்திலும் இருந்தது.

இந்த போட்டியில் டெல்லி அணியில் ஷாய் ஹோப்க்கு பதிலாக டேவிட் வார்னர் சேர்க்கப்பட்டார். சன் ரைசர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சன் ரைசர்ஸ் ருத்ரதாண்டவம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் அடித்துள்ளது. இந்த சீசனில் நான்காவது முறையாக 200+ ஸ்கோரும், மூன்றாவது முறையாக 250+ ஸ்கோரையும் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 89, ஷபாஸ் அகமது 59, அபிஷேக் ஷர்மா 46, நிதிஷ் குமார் ரெட்டி 37 ரன்கள் எடுத்தனர்.

டெல்லி பவுலர்களில் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷ் குமார், அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.டெல்லி அணியின் அனைத்து பவுலர்களையும் சன் ரைசர்ஸ் அடித்து துவைத்தனர்.

டெல்லி சேஸிங்

267 ரன்கள் என்ற சாதனை இலக்கை விரட்டிய டெல்லி கேபிடல்ஸ் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சன் ரைசர்ஸ் 67 ரன்கள் வித்தியாசத்தில் சீசனின் 5வது வெற்றியை பெற்றதுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

அதிகபட்சமாக ஜேக் பிராசர்-மெக்குர்க் 65, ரிஷப் பண்ட், அபிஷேக் போரல் 42 ரன்கள் எடுத்தனர்.

சன்ரைசர்ஸ் பவுலர்களில் அற்புமாக பந்து வீசிய தமிழ்நாடு வீரர் நடராஜன்19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மயங்க் மார்கன்டே, நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்

இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்து டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்கள் திணறடித்தார். யார்க்கல், ஸ்லோ பவுன்சர் என வேரியேஷன் காட்டி பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினார்.

ஆட்டத்தின் 19வது ஓவரை வீசிய அவர், அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், மெய்டனாகவும் ஆக்கினார். சன் ரைசர்ஸ் பவுலர்களில் மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசிய அவர் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது ஐபிஎல் போட்டிகளில் அவரது சிறந்த பவுலிங்காக அமைந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point