தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: ‘குருவும் குபேரனும் சேர்ந்து விட்டனர்’ 118 நாட்கள் பணமழை.. குரு பலத்தால் ஜொலிக்கப் போகும் ராசிகள்

Guru Peyarchi 2024: ‘குருவும் குபேரனும் சேர்ந்து விட்டனர்’ 118 நாட்கள் பணமழை.. குரு பலத்தால் ஜொலிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 24, 2024 09:50 AM IST

Guru kubera Luck 2024: குருபகவான் செப்டம்பர் மாதம் நான்காம் தேதி என்று குரு பகவான் தனது வக்ர பயணத்தை மேற்கொள்ள உள்ளார். குரு பகவானின் இந்த பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது.

குருபகவான்
குருபகவான்

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் மே மாதம் மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அது சுக்கிர பகவானின் ராசியாகும். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் மாதம் நான்காம் தேதி என்று குரு பகவான் தனது வக்ர பயணத்தை மேற்கொள்ள உள்ளார். குரு பகவானின் இந்த பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

குருபகவானின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாக்கி பணமழை கொட்டும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

மேஷ ராசி

 

குரு பகவானின் வக்ர பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். தலைகீழ் மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கப் போகின்றீர்கள் சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. மிகநலமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஒன்றாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வருமானத்தில் எந்த துறையும் இருக்காது.

கடக ராசி

 

குருபகவானின் வக்ர பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணைவியின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel