தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Know About The History Of Ramanathapuram Vazhividu Murugan Temple

HT Yatra: சனியின் அம்மா இருக்கும் தலம்.. வழக்கை தீர்க்கும் வழி விடும் முருகன்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 03, 2024 06:00 AM IST

ராமநாதபுரம் வழிவிடும் முருகன் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

வழிவிடும் முருகன் திருக்கோயில்
வழிவிடும் முருகன் திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

பல்வேறு சிறப்பு மிக்க ஆலயங்கள் எழுப்பப்பட்டு முருகப் பெருமானுக்கு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இருக்கக்கூடிய சிறப்பான தலங்களில் ஒன்றுதான் வழிவிடும் முருகன் திருக்கோயில். இந்த திருக்கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் முக்கிய சிறப்பு என்னவென்றால் கர்ப்ப கிரகத்தில் முருக பெருமான் மற்றும் விநாயக பெருமான் இருவரும் சேர்ந்து அருள் பாலித்து வருகின்றனர். இது மிகவும் அரிதான காட்சியாகும். குறிப்பாக இந்த கோயிலில் சனீஸ்வரனின் தாயாரான சாயாதேவி மரம் வடிவில் அருள்பாலித்து வருகிறார். இந்த மரத்திற்கு சாயா மரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தலத்தின் பெருமை

 

அனைத்து கோயில்களிலும் நுழைவு வாயிலில் எப்போதும் இடதுபுறத்தில் விநாயக பெருமானும் வலது புறத்தில் முருக பெருமானும் இருப்பார்கள் அவர்களை வழிபாடு செய்து விட்டு தான் கோயிலுக்குள் செல்வது வழக்கம். ஆனால் இந்த கோயிலில் கர்ப்ப கிரகத்தில் முருகப்பெருமான் மற்றும் விநாயகப் பெருமான் இருவரும் அருள் வாளித்து வருகின்றனர்.

சனீஸ்வரனின் தாயாராக விளங்கக்கூடிய சாயாதேவி இங்கு மரமாக வீற்றிருக்கிறார். இவரை வழிபாடு செய்தால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கும் என கூறப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சாயாதேவியை வழிபட்டால் தாயின் பேச்சைக் கேட்டு சனீஸ்வர பகவான் நமது துன்பங்களை போக்குவார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

நீதிமன்ற வழக்குகளுக்காக வரக்கூடிய நபர்கள் இந்த கோயிலில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் மற்றும் விநாயக பெருமானை வழிபட்டால் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என நம்பப்படுகிறது. தற்போது பெரிய கட்சிகளில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்களும் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற வழக்குகளை தீர்ப்பதற்காகவே இந்த முருக பெருமானுக்கு ஏராளமான பக்தர்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படக்கூடிய கோயிலாக திகழ்ந்து வருகிறது.

தல வரலாறு

 

இப்போது வழி விடு முருகன் கோயில் இருக்கக்கூடிய இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு மரம் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு ஒரு சிறிய வேல் நடப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கோயிலுக்கு அருகே நீதிமன்றம் இருந்துள்ளது. அங்கு வழக்குக்காக வரக்கூடியவர்கள் மரத்தடியில் இருக்கக்கூடிய வேலை வணங்கி விட்டு சென்றுள்ளனர்.

வாழ வழி இல்லாமல் நிற்கக்கூடிய மக்கள் வழிபாடு செய்வதன் மூலம் இந்த மிருகப் பெருமான் வழிகாட்டியதாக கூறப்படுகிறது. தவறான வழக்கில் சிக்கிக் கொண்ட நிரபராதிகள் இந்த முருகனை வழிபட்டு செல்வதன் மூலம் சிக்கல்கள் குறைந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த முருகப்பெருமானை வழிவிடும் முருகன் என அழைத்துள்ளனர். பக்தர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த முருகப்பெருமாள் துணை நிற்கிறார் என நம்பி வருகின்றனர்.

அமைவிடம்

 

இந்த திருக்கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இங்கே தங்கும் வசதிகள். வாகன வசதிகள் அனைத்தும் உள்ளன.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel