தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2024 Guru Peyarchi Palan: ’குரு பெயர்ச்சியால் திடீர் திருமணம் எந்த ராசிக்கு?’ இதோ முழு விவரம்!

2024 Guru Peyarchi Palan: ’குரு பெயர்ச்சியால் திடீர் திருமணம் எந்த ராசிக்கு?’ இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Apr 21, 2024 11:56 AM IST

”7ஆம் வீட்டை (களத்திர ஸ்தானம்) குரு பார்வையிட்டால், திருமண வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். ஒருவரது தசாபுத்தியில் குரு திசை நடந்தால், திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது”

குருபெயர்ச்சியில் திருமணம் ஆகும் ராசிகள்
குருபெயர்ச்சியில் திருமணம் ஆகும் ராசிகள்

ஜோதிடத்தை பொறுத்தவரை குருபகவான் அந்தணர் ஆவார். குரு பலன் இல்லாத நேரத்தில் திருமணம் செய்வது அவ்வளவு நல்லது கிடையாது.

ஜோதிடத்தில், குரு பகவான் திருமணம், கல்வி, குழந்தைகள், செல்வம், ஞானம் போன்ற விஷயங்களுக்கு காரகத்துவம் பெற்றவராக உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால், திருமண யோகம் விரைவில் அமையும். 7ஆம் வீட்டை (களத்திர ஸ்தானம்) குரு பார்வையிட்டால், திருமண வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். ஒருவரது தசாபுத்தியில் குரு திசை நடந்தால், திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.

ரிஷபம் ராசி

ரிஷபம் ராசி, ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டில் திருமண யோகத்தை குரு பகவான் தருகிறார். ரிஷப ராசியில் இருந்து திருமண ஸ்தானமான 7ஆம் வீட்டில் குரு பார்வை படுவதால் மே மாதத்திற்கு பிறகு திருமணத்திற்கான முயற்சிகளை செய்தால் ரிஷபம் ராசி மற்றும் ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் நிச்சயம் நடைபெறும். 

மிதுனம் ராசி

வரும் குரு பெயர்ச்சிக்கு பிறகு அடுத்த ஒரு ஆண்டு காலத்தில் மிதுனம் ராசி, மிதுன லக்னத்தை பொறுத்தவரை மறைவு ஸ்தானத்தில் குரு செல்ல உள்ளதால் திருமணத்திற்கான சாத்தியக்கூறுகள் சற்று குறைவாகவே உள்ளது. 

கடகம் ராசி

கடகம் ராசி மற்றும் கடக லக்னத்தை பொறுத்தவரை திருமணம் யோகம் உள்ளது. குரு பகவானின் 9ஆம் பார்வை கடக ராசியின் 7ஆம் வீட்டை பார்க்கிறது. இதனால் கடக ராசி மற்றும் கடக லக்னத்தினருக்கு சிறிது முயற்சி எடுத்தாலே கண்டிப்பாக வரன்கள் அமைய வாய்ப்புகள் உள்ளது. 

விருச்சிகம் ராசி 

விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரும் மே மாதம் நடைபெற உள்ள குரு பெயர்ச்சிக்கு பிறகு கண்டிப்பாக திருமணம் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 7ஆம் இடமான களத்திர பாவத்தில் குரு பகவான் உள்ளார். பெண் வீட்டில் இருந்தே மணமகனை தேடி வரும் சூழல் ஏற்படும். 

மீனம் ராசி 

மீனராசி மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் 5ஆம் பார்வை 7ஆம் வீட்டில் விழுவதால் வரன் தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு திருமணம் ஆகும் அதிக வாய்ப்புகள் உண்டு. 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel