Guru Peyarchi 2024: 'குரு பெயர்ச்சியில் குபேர யோகம் பெறும் 8 ராசிகள்!’ இதோ முழுமையான பலன்கள்!
”Guru Peyarchi 2024: ஒருவர் பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் எனில் தனகாரகனான குருவின் ஆதரவு அவசியம். குரு பகவான் அருள் பெற ராசிகளுக்கு குபேர யோகம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது”
வரும் மே மாதம் ஒன்றாம் தேதி மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். ஒருவர் பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் எனில் தனகாரகனான குருவின் ஆதரவு அவசியம். குரு பகவான் அருள் பெற ராசிகளுக்கு குபேர யோகம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேஷம்
இந்த குரு பெயர்ச்சியில் மேஷம் ராசி மற்றும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குபேர யோகம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. மேஷ ராசியின் இரண்டாம் இடமான தன ஸ்தானம் எனப்படும் ரிஷப ராசியில் குரு பகவான் பெயர்ச்சி ஆவதால் கண்டிப்பாக குபேர யோகம் ஏற்படும். ஏதோ ஒரு விதத்தில் தன வரவு இருந்து கொண்டே இருக்கும்.
ரிஷபம்
ராசிக்கு குரு வருவதால் ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தனவரவு அதிகம் இருக்கும். பொருளீட்டும் சிந்தனை ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிகம் ஏற்படும் என்பதால் பணத்தை தேடி பயணிப்பீர்கள்.
கடகம்
கடக ராசி மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் குரு வருகிறார். இவர்கள் என்ன வேலை செய்தாலும், என்ன தொழில்களை செய்தாலும் பண வரவு மிக நன்றாக இருக்கும். குரு பகவான் தரும் குபேர யோகம் மூலம் அதிக பணத்தை ஈட்டுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசி மற்றும் சிம்ம லக்னக்கரர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் குபேர யோகம் உண்டு. 10ஆம் இடத்தில் குரு பகவான் வருவது பதவி பறிபோகும் என்பார்கள், ஆனால் அது முழு உண்மை இல்லை. வகிக்கும் பதவியில் இருந்து அடுத்த பதவியை நோக்கி செல்ல குரு வாய்ப்பு ஏற்படுத்தி தருவார். சொந்த தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலை விரிவு செய்வீர்கள். வேலை அல்லது தொழில் சார்ந்த வளர்ச்சியை இந்த குரு பெயர்ச்சியில் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்தை குரு பார்க்கிறார். அதுமட்டுமின்றி கன்னி ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ரிஷபத்திற்கு குரு வருகிறார். பாக்கிய ஸ்தானத்தில் சுபகிரங்கள் பெயரும் போது எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
குரு பகவனின் சமசப்தம பார்வையாக விருச்சிகம் ராசியை பார்ப்பதால் பெரும் வளர்ச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்குதல், வரன் பார்த்தல், புதிய வேலை தேடுதல், வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட முயற்சிகளுக்கு குருவின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு 6ஆம் இடத்தில் மறைந்து இருந்தாலும், குருவின் 5ஆம் பார்வை தனுசு ராசிக்கு 10ஆம் வீட்டில் விழுவதால் தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
மகரம் ராசி மற்றும் மகர லக்னத்தினருக்கு இந்த காலகட்டம் யோகமாக காலம் ஆகும். இவர்களுக்கு குபேர யோகத்தை குரு பகவான் கொடுக்கிறார். மகர ராசியின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் அடுத்த ஒரு ஆண்டுக்கு இருக்கிறார். மேலும் 5ஆம் வீட்டில் இருந்து உங்கள் லக்னத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் குரு பார்க்கிறார். இவர்கள் வாழ்கையில் முன்னேற கொஞ்சம் முயற்சி எடுத்தால் வாழ்கையில் பெரிய முன்னேற்றங்கள் அடைய வாய்ப்புகள் உண்டு.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.