தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astrology: ஆண்மை குறைவு எந்த ராசிக்கு ஏற்படும்! ஜோதிடம் சொல்லும் ரகசியம்! முழு விவரம் இதோ!

Astrology: ஆண்மை குறைவு எந்த ராசிக்கு ஏற்படும்! ஜோதிடம் சொல்லும் ரகசியம்! முழு விவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Apr 07, 2024 04:46 PM IST

“சுகமான இல்லற வாழ்க்கைக்கு செவ்வாய், சுக்கிரன், சந்திர கிரகங்கள் முக்கியமானதாக உள்ளது”

ஆண்மை குறைவு பாதிப்பு எந்த ஜாதகத்திற்கு ஏற்படும்?
ஆண்மை குறைவு பாதிப்பு எந்த ஜாதகத்திற்கு ஏற்படும்?

அடுத்ததாக மர்ம ஸ்தானம் எனப்படும் 8ஆம் இடத்தின் பலத்தை வைத்து குழந்தை பிறப்பு குறித்து கணிக்கின்றனர். 

வீரியம் என்ற சொல்லுக்கு செயல்திறன் என்று பொருள், இதற்கு உரிய கிரகமாக செவ்வாய் கிரகம் விளங்குகிறது. 

உயிரணுக்குக்களுக்கு உரிய கிரகமாக சுக்கிரனும், மனதை கட்டுப்படுத்தும் கிரகமாக சந்திரனும் உள்ளனர். 

எனவே சுகமான இல்லற வாழ்க்கைக்கு செவ்வாய், சுக்கிரன், சந்திர கிரகங்கள் முக்கியமானதாக உள்ளது. 

முற்காலங்களின் ஆண்களின் வீரியத்தை அளவிட காளையை அடக்குதல், பாறைகளை தூக்குதல் உள்ளிட்ட வீர விளையாட்டுக்களை நடத்தினர். 

ஒரு ஜாதகத்தில் ஒரே வீட்டில் புதன், கேது சேர்ந்து இருந்தால் அலித்தன்மை வர வாய்ப்புகள் உள்ள என ஜோதிடர் அஸ்ட்ரோ பாலா வேலூர் கூறுகிறார். இந்த கிரகங்கள் உடன் சனி பகவான் சேர்ந்தால் மந்த நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

காமத்திற்கு காரக கிரகமான சுக்கிரனை சனி தனது பார்வையால் பார்த்தால் ஆசை அதிகமாக இருக்கும் அதே வேலையில் இயலாமை அதிகம் இருக்கும். 

ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருந்தால் புத்திர பாக்கியம் உறுதியாக இருக்கும். 

அதிக வேலை புளு, கோபம், மன அழுத்தம் உள்ள நபர்களுக்கு இயல்பாகவே வீரியம் குறைவதால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. ஒரு ஜாதகத்தில் புதன், சனி, கேது, சுக்கிரன் கிரகங்கள் சேர்ந்து இருப்பது ஆண்மை குறைவு போன்ற வீரியம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும்  

அதே போல் ஒரு ஜாதகத்தில் வியாதிக்குறியதாக கணிக்கப்படும் 6ஆம் இடம் மற்றும், விந்து வெளியேற்றுவதற்கு உரியதாக கணிக்கப்படும் 8ஆம் இடத்தில் பிரச்னை இருந்தால் வீரிய பிரச்னைகள் இருக்கும். 

மேலும் ஒருவரது ஜாதகத்தில் 8ஆம் அதிபதி பலம் குறைந்து இருந்தால் மர்ம உறுப்புகளின் பலம் குறைந்து ஆண்மை குறைவு ஏற்படும். 

அதே போல் ஒரு ஜாதகத்தில் கேதுவும், செவ்வாயும் திரிகோணமாக இருந்தால் அந்த ஜாதகர் வீரிய பிரச்னைகளை சந்த்க்க வேண்டி வரும்.  செவ்வாய் கிரகத்திற்கு 2ஆம் இடத்தில் கேது வந்தாலும் ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு 

திருமண பொறுத்தம் பார்க்கும் போது பகை யோனி கொண்ட ஜாதகத்தை திருமணம் செய்ய கூடாது. அப்படி செய்தாலும் இல்லற வாழ்கையில் திருப்தி இருக்காது. 

இது போன்ற பிரச்னைகள் வந்தால், இதில் இருந்து தீர்வு கிடைக்க நமது மனதை நிதானமாகவும், அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம். நமது உடலும், மனமும் மகிழ்ச்சியாக இருந்தால் வீரியத்தன்மை இயல்பாக வரும். 

செவ்வாயின் காரகத்துவமான மலை பிரதேசங்களில் மாதம் ஒரு அல்லது இரண்டு நாட்கள் தங்க வேண்டும். 

வீரபத்திர சுவாமி, மற்றும் அறுபடை வீடு முருகனை மனதார வழிபாடு நடத்த வேண்டும். 

அருணகிரி நாதர் எழுதிய திருப்புகழை படிக்க வேண்டும். 

உணவுப்பழகங்களில் மாற்றம் செய்ய வேண்டும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்