தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Viral Video:தீவிரவாதி என அழைத்த விரிவுரையாளர்! ஆதங்கத்தை வெளிப்படுத்திய மாணவர்

Viral video:தீவிரவாதி என அழைத்த விரிவுரையாளர்! ஆதங்கத்தை வெளிப்படுத்திய மாணவர்

Nov 29, 2022, 10:56 PM IST

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற மனிபால் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவரை, கல்லூரி விரிவுரையாளர் தீவிரவாதி கசாப்பின் பெயருடன் ஒப்பிட்டு பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 49 விநாடிகள் ஓடும் இந்த விடியோவில் மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட கசாப் பெயரை தனது பெயருடன் ஒப்பிட்டு பேசி அதை நகைப்புக்காகதான் கூறினேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்த மாணவர் விரிவுரையாளரிடம் கடுமையாக பேசுகிறார். இந்த விவகாரத்தில் சர்ச்சைகுள்ளான அந்த விரிவுரையாளரை வகுப்பு எடுப்பதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்திருப்பதோடு, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கமிட்டி ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்த நாட்டில் ஒரு முஸ்லீமாக இருந்துகொண்டு நாள்தோறும் இதுபோன்ற விஷயங்களை சந்திப்பது விளையாட்டான விஷயமல்ல எனவும், இதுபோன்ற ஜோக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஒரு மதத்தை பற்றி இப்படி இழிவான முறையில் யாரும் ஜோக் சொல்ல மாட்டார்கள், உங்கள் மகனிடம் இப்படி பேசுவீர்களா? அவரை தீவிரவாதி பெயரை ஒப்பிட்டு அழைப்பீர்களா என அந்த மாணவன் விரிவுரையாளரிடம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். இதற்கு அவர் இல்லை என்று கூறவே, பின் இத்தனை மாணவர்கள் முன்னிலையில் என்னை ஏன் அவ்வாறு அழைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அந்த விரிவுரையாளர் மாணவனிடம் மன்னிப்பு கோர, அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன், நீங்கள் ஒரு ஆசிரியர். இவ்வாறு நடந்துகொள்ள கூடாது, உங்களது மன்னிப்பு நீங்கள் மனதில் நினைக்கும் விதத்தை மாற்றாது, உங்களை எப்படி நீங்கள் இங்கு காட்டிக்கொள்கிறீர்கள் என்பதை தெளிவாக காட்டியுள்ளது. மனிபால் தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள வகுப்பறையில் நிகழ்ந்த இந்த சம்பவம் வைரலான நிலையில், அந்த விரிவுளையாளர் பாடம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.