தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பணப்பற்றாக்குறை! இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட விரும்பும் பாகிஸ்தான்

பணப்பற்றாக்குறை! இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட விரும்பும் பாகிஸ்தான்

Mar 13, 2023, 06:34 PM IST

  • India and Pakistan Cricket Ties: பணபற்றாக்குறையால் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுடன் கிரிக்கெட் உறவை மீண்டும் இணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள மாகணங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அமைச்சர் எஹ்சான் உர் ரஹ்மான் மசாரி என்பவர் இதுபற்றி கூறும்போது, உலகமே உற்று பார்க்கும் இரு எதிரிநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டும் நடைபெறாமல் உள்ளது. எனவே பிரதமர் மோடி அரசியலை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்தியாவின் கூடைப்பந்து விளையாட்டு அணியினர் பாகிஸ்தான் வருவது போலவே ஏன் கிரிக்கெட் அணியினராலும் வரக்கூடாது. இங்கு நடைபெற்ற பிஎஸ்எல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் விளையாடியுள்ளனர். இதன்மூலம் இங்கு பாதுகாப்பு குறைபாடு என்பது இல்லை என நிருபனம் ஆகியுள்ளது. ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இந்தியாவுடனான கிரிக்கெட் உறவை தொடரவே விரும்புகிறது. இதன்மூலம் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கும் என்ற தகவலை மறைமுகமாக பாகிஸ்தான் வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா அங்கு செல்லாது எனவும் தொடரை நடைபெறும் இடத்தை மாற்றவும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது இருநாடுகள் கிரிக்கெட் உறவை தொடரை வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.