தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Fire On U.s Navy Warship: அமெரிக்கா கடற்படை கப்பலில் தீ விபத்து

Fire on U.S Navy warship: அமெரிக்கா கடற்படை கப்பலில் தீ விபத்து

Dec 02, 2022, 09:58 PM IST

அமெரிக்காவின் கடற்படை கப்பலில் தீ வபத்து ஏற்பட்ட நிலையில், 9 மாலுமிகள் காயமடைந்துள்ளனர். மூன்று கால்பந்து மைதானம் அளவில் நீளமாக இருக்கும் இந்த போர் கப்பலில் இரண்டு அணுமின் நிலையங்கள் அமைந்துள்ளன. இதன்மூலம் சுமார் 1 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேபோல் 400,000 கலான் அளவில் கடல் நீரை குடிநீராக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. USS Abraham Lincoln என்ற அந்த போர் கப்பல் வழக்கம்போல் தெற்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் வரை வழக்கமான செயல்பாட்டுக்காக சென்றுள்ளது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உடனடியாக கப்பலில் இருந்த குழுவினரால் அணைக்கு முயற்சி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த தீ விபத்து காரணமாக இந்த போர் கப்பலை மீண்டும் கரைக்கு திருப்பிடும் முடிவு செய்யப்படவில்லை. அத்துடன் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசார\ணை நடைபெற்று வருகிறது.