தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Radioactive Device Missing: காணாமல் போன ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்க கேப்ஸ்யூல்

Radioactive Device Missing: காணாமல் போன ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்க கேப்ஸ்யூல்

Jan 30, 2023, 09:47 PM IST

மேற்கு ஆஸ்திரேலியா பாலைவன பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த் கதிரியக்க கேப்ஸ்யூல் காணாமல் போயுள்ளது. மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கதிரியக்க கேப்ஸ்யூல் குறித்து நாடு முழுவதும் தகவல் பரவிய நிலையில், நாடு தழுவிய அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொடிய அபத்தை விளைவிக்கும் இந்த சாதனத்தை தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போயிருக்கும் கதிரியக்க சாதனம் 8 மில்லி மீட்டர் நீளமும், அதில் சிறிய அளவிலான கதிரியக்க ஐசோடோப் சீசியம்-137 நிறைந்துள்ளது. இந்த பொருளின் வெளிப்பாடு கதிர்வீச்சு தீக்காயங்கள் அல்லது நோய் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. 1, 400 கிலோ மீட்டர் தூரமான சாலையில் வைத்து இந்த கதிரியக்க கேப்ஸ்யூல் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகத்துக்கு இடமான பொருள்களை கண்டால் பொதுமக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த கேப்ஸ்யூலை மிஸ் செய்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா சுரங்க நிறுவனம், ரியோ டின்டோ குரூப் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மிகவும் சிறிதான ஆபத்தான விளைவிக்கும் இந்த கேப்ஸ்யூல் லாரியில் கொண்டு சென்றபோது மிஸ்ஸாகியுள்ளது. கடந்த 12ஆம் தேதி சுரங்கம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட இந்த கேப்ஸ்யூல் பெர்த் நகரிலுள்ள கதிரியக்க மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்ற ஆய்வின்போது இந்த கேப்ஸ்யூல் காணாமல் போனது கண்டறியப்பட்டது.