தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Woman Who Cheated 164 People To The Tune Of 7 Crore

Fraud Case: 7 கோடி மோசடி - பெண் உள்பட 4 பேர் சிக்கினர்

Mar 25, 2023, 08:01 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் 164 பேரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த பெண் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 164 பேரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த பெண் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 164 பேரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த பெண் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துறையூர் சாலையில் அருகே அமைந்துள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஆறு விதமான செல்போன் முதலீடு திட்டங்கள் இருப்பதாகக் கூறி பல வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூல் செய்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Summer Rain Warning: ’கோடை மழையில் நனைய ரெடியா! இரவு 11.15 வரை 8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ வானிலை மையம் அறிவிப்பு!

BJP VS DMK: ’மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்!’ ஸ்டாலினை விளாசும் எல்.முருகன்!

Ooty and Kodaikanal E-Pass: ’ஊட்டி. கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அவசியம்!’ நீதிபதிகள் சொன்ன முழு விவரம் இதோ!

Weather Update: ‘அதிகரிக்கும் வெப்பம்! பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா?’ இதோ விவரம்!

இந்நிலையில் சரியான நேரத்தில் பணத்தைத் திருப்பி தராத காரணத்தினால் இந்த நிறுவனம் மீது பலர் புகார் அளித்துள்ளனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட குமாரபாளையத்தைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் நாமக்கல் மாவட்டம் பொருளாதாரம் குற்றப்பிரிவில் கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எட்டாம் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி வரை 12 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் இந்த தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், இந்த பணத்தில் ஆறு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை செந்தில்குமார் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், செந்தில்குமார், ராமச்சந்திரன், அழகர், சசிகலா, கார்த்திக், கனகா, ஆறுமுகம், தேவி மணி, பிரபாகரன் ஆகியோர் 164 முதலீட்டாளர்களிடம் ஏழு கோடி வரை வசூல் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ஆறு பேரைக் கைது செய்வதற்காகச் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் எஸ்.பி தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது அந்த ஆறு பேரைத் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்