தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வடமாநில தொழிலாளர் பிரச்சனை; சீமான் மீது நடவடிக்கை இல்லை ஏன்-பிரசாந்த் கிஷோர்

வடமாநில தொழிலாளர் பிரச்சனை; சீமான் மீது நடவடிக்கை இல்லை ஏன்-பிரசாந்த் கிஷோர்

Mar 10, 2023, 02:48 PM IST

வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தேசிய அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில் தற்போது பிரசாந் கிஷோரின் டுவிட் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. (PTI)
வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தேசிய அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில் தற்போது பிரசாந் கிஷோரின் டுவிட் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.

வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தேசிய அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில் தற்போது பிரசாந் கிஷோரின் டுவிட் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலியான வீடியோகள் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலை தலங்களில் வைரலான நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு வட மாநிலத்தவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் டிஜிபி சைலோந்திரபாபு வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படம் என்று தெரிவித்திருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

EPS, DMK Government: திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை..இன்னும் இந்த ஆட்சி தொடர்ந்தால்- விளாசும் இபிஎஸ்!

Weather Update: சென்னையில் சட்டென மாறிய வானிலை..14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

இந்நிலையில் தொடர்ச்சியாக வட மாநில தொழிலாளர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் தனது கட்சி மேடைகளில் பேசிவரும் சீமான் மீது பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டி உள்ளர்.

முன்னாள் ஐபேக் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரஷாந்த் கிஷோர் சீமானை கண்டித்து ட்வீட் போட்டுள்ளார். அதில், வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களை பரப்பிய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? '' என பிரஷாந்த் கிஷோர் ட்விட் செய்துள்ளார். ஏற்கனவே வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தேசிய அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில் தற்போது பிரசாந் கிஷோரின் டுவிட் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.

இதேபோல வட மாநில தொழிலாளர்களை மையப்படுத்தி எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பிரபல யூடியூபர்களான பரிதாபங்கள் கோபி, சுதாகர் தான் காரணம் என்றும் அவர்களது சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் வேண்டுகோள் விடுத்த நிலையில் அவர்கள் மீது புகார் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில் நேற்று கோவை சரகத்தில் உள்ள தொழில் முனைவோர், தொழில் அதிபர்களுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். இப்போது நிலைமை சரியாக இருக்கிறது.

மேலும் தொடர்ந்து தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போபால்,பாட்னா உட்பட பல இடங்களில் போலீசார் முகாமிட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து புலம் பெயர் தொழிலாளர்களுடன் தொடர்ந்து உரையாடல் வைத்து கொள்ளவும் அறிவுறுத்தபட்டுள்ளது.

பீகார்,ஜார்கண்ட் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவு பயந்து இருக்கின்றனர். அதனால் அவர்கள் மொழியில் இது தவறானது என தகவல்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வைரல் வீடியோ தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோலிபண்டிகைக்கு சென்ற தொழிலாளர்கள் 15 நாட்களில் திரும்ப வாய்ப்புள்ளது என்று சைலேந்திரபாபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பிரசாந்த் கிஷோரின் ட்விட் சீமானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

டாபிக்ஸ்