தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’2025 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!’ டாப் 10 நியூஸ்!

Top 10 News: ’2025 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Nov 22, 2024, 07:32 PM IST

google News
3 மருத்துவ மாணவர்களின் இடம் ரத்து, 2025ஆம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு, அதிமுக குறித்து எஸ்.பி.வேலுமணிபேட்டி, அதானி விவகாரம் தொடர்பாக பிரேமல்தா கருத்து, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கம் உள்ளட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
3 மருத்துவ மாணவர்களின் இடம் ரத்து, 2025ஆம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு, அதிமுக குறித்து எஸ்.பி.வேலுமணிபேட்டி, அதானி விவகாரம் தொடர்பாக பிரேமல்தா கருத்து, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கம் உள்ளட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

3 மருத்துவ மாணவர்களின் இடம் ரத்து, 2025ஆம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு, அதிமுக குறித்து எஸ்.பி.வேலுமணிபேட்டி, அதானி விவகாரம் தொடர்பாக பிரேமல்தா கருத்து, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கம் உள்ளட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

1.3 பேரின் மருத்துவ இடங்கள் ரத்து

தமிழ்நாடு மருத்துவக் கலந்தாய்வில் போலி சான்று அளித்த 3 வெளிநாடு வாழ் இந்தியர்களின் மருத்துவ இடங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இடம் ரத்து செய்யப்பட்ட மூன்று பேருக்கு பதிலாக வேறு மூவரை தேர்வு செய்ய வரும் 25ஆம் தேதி அன்று சிறப்பு கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

2.செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் சாரணையை ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். 

3.2025ஆம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள் 

2025ஆம் ஆண்டில் 24 நாட்களை பொதுவிடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் 3 நாட்களும், புதன் கிழமைகளில் 4 நாட்களும், விழாயக் கிழமைகளில் 6 நாட்களும், வெள்ளிக் கிழமைகளில் 3 நாட்களும், சனிக் கிழமைகளில் 2 நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

4.அதிமுக ஒரு ஜனநாயக கட்சி 

அதிமுக ஒரு ஜனநாயக கட்சி; இங்கு வாரிசு அரசியல் இல்லை; அதிமுகவில் உழைப்பவர்கள் தானாக உயர்ந்த இடத்திற்கு வர முடியும். தாத்தா, அப்பா, மகன் என்ற நிலையில் திமுகவில் தலைவர்கள் வருகின்றனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி. 

5.அதிமுக தொண்டர்களுக்கு ஒற்றுமை தேவை 

நமக்குள் இருக்கும் பிரச்னைகளை மறந்துவிட்டு நாம் ஒற்றுமையாக இருப்போம். நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை வீழ்த்த ஆட்கள் இல்லை. உரிமைகளை மீட்டெடுத்த இயக்கமான அதிமுகவில் தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருப்போம் என நெல்லை அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டர்களுக்கு அறிவுரை. 

6.காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு 

தென் கிழக்கு வங்கக் கடலில் நாளை (23.11.24) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகரும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. 

7.சங்கி என்றால் நண்பன் 

அரசியல் என்பது வாழ்வியல்; அதன் மீது ரஜினிக்கு ஆர்வமுண்டு ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது. சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி. 

8.டைடல் பூங்காவை திறந்த முதல்வர்

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் கட்டப்பட்ட டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 330 கோடி ரூபாயில் 11.41 ஏக்கரில் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பில் உடற்பயிற்சி கூடம், உணவகம் உள்ளிட்ட பல்வேறூ வசதிகளுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

9.அதானி குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்

அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை என அமைச்சர் கருத்து கூறி உள்ளார். மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அதானி குழுமம் மீதான ஊழல் குற்றச்சாட்டை நீதியரசர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து. 

10.துவரம் பருப்பு தட்டுப்பாடு! ராமதாஸ் கண்டனம்

சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாய விலைக்கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் வந்து விடும் என்ற பதில் தான் கிடைக்கிறதே தவிர, துவரம்பரும்பு வினியோகிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய விவகாரங்களில் காட்டப்படும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி