தேர்தல் என்றாலே திமுக - அதிமுக மட்டும்தான்! விஜய் அரசியலில் ஜெயிக்க இதை செய்ய வேண்டும் - எஸ்.வி. சேகர் பேச்சு
தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே திமுக - அதிமுக மட்டும்தான். விஜய் அரசியலில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டிய விஷயங்கள் முதல், பிராமணர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் பேசியுள்ளார்.

தேர்தல் என்றாலே திமுக - அதிமுக மட்டும்தான்! விஜய் அரசியலில் ஜெயிக்க இதை செய்ய வேண்டும் - எஸ்.வி. சேகர் பேச்சு
சென்னை மந்தைவெளியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து நடிகர் எஸ்.வி. சேகர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் டப்பிங் சங்கம் விவகாரத்தில் நிலவும் அரசியல், விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்திருப்பது முதல் பிராமணர்கள் ஆர்ப்பாட்டம் வரை பல்வேறு விஷயங்களை பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, "தென்னிந்திய திரைப்பட டப்பிங் சங்கம் 1981 பிறகு தொடங்கப்பட்டு, ராதாரவி தலைமையில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
பல முறை பெயர் மாற்றுகிறார்கள்
தற்போது இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், ஆரம்பத்தில் அதை டப்பிங் சங்கம் என்றனர். பின்னர் டப்பிங் மற்றும் நடிகர்கள் சங்கம் என்று மாற்றினார்கள். அதன் பின் ஒவ்வொரு முறையும் எதாவது பெயரை மாற்றி கொண்டு வருகிறார்கள்.