Top 10 News : பட்டாசு புகையால் மோசமான காற்றின் தரக்குறியீடு.. சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி உள்ளிட்ட முக்கிய செய்திகள்!
Oct 31, 2024, 08:20 PM IST
Top 10 Tamil Nadu : சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது முதல் தோனியை தக்க வைத்த சிஎஸ்கே அணி வரை என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
Top 10 Tamil Nadu : சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது முதல் தோனியை தக்க வைத்த சிஎஸ்கே அணி வரை என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
சென்னையில் மோசமான காற்றின் தரக்குறியீடு
தீபாவளி திருநாளை தொடர்ந்து பலரும் பட்டாசு வெடித்து வருவதால் சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200 ஐ தாண்டி உள்ளது.
பட்டாசு தீப்பொறி விழுந்ததால் தீ விபத்து
சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடு வேயப்பட்டிருந்ததால் குடோன் முழுவதும் தீ பரவி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிவாரண நிதி
ராமநாதபுரம் பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (36) உயிரிழந்துள்ளார். முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின் கம்பியில் கொடிக்கம்பம் பட்டதில் மின்சாரம் பாய்ந்து பரமக்குடி எஸ்.ஐ சரவணன் உயிரிழந்துள்ளார். சரவணன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
வவ்வால்களை பாதுகாக்க பட்டாசு வெடிக்காத கிராமம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களை கட்டிய நிலையில் பட்டாசுகளை ஆர்வமுடன் மக்கள் வெடித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் அம்மா பேட்டையில் உள்ள அய்யாசாமி பசுமை பூங்காவில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. வவ்வால்களை பாதுகாக்கும் நோக்கில் பட்டாசு வெடிப்பதை அந்த கிராம மக்கள் தவிர்த்துள்ளனர். இதே போல் வேலூர் மாவட்டம் காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்த மக்களும் 5 புளிய மரங்களில் வாழும் ஆயிரக்கணக்கான வவ்வால்களை பாதுகாக்க பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
பட்டாசு விபத்தில் 82 பேருக்கு காயம் - தீயணைப்புத்துறை
தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்ததில் இதுவரை 82 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுவரை ஏற்பட்ட தீ விபத்துகளில் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளனர். அதேபோல் தமிழகம் முழுவதும் பட்டாசு அல்லாமல் 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.
பட்டாசு விற்பனை நிலவரம்
தமிழகத்தின் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் தீபாவளி பண்டிகையையொட்டி, தயாரான பட்டாசுகள் நாமு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் அருகே ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிப்பு
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் சிவன் கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடம் வந்து ராக்கெட் லாஞ்சரை பாதுகாப்பாக அங்கிருந்து கொண்டு சென்றனர்.
மதுரையில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து போடி வரை இயக்கப்படும் விரைவு ரயில், மதுரை சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலில் மின்சார எஞ்ஜின் கழற்றப்பட்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டது. பின்னர் ரயில் போடியை நோக்கி புறப்பட்டபோது, எஞ்சினுக்கு அடுத்து இருந்த ரயில் மேலாளர் பகுதியுடன் இணைந்த இரண்டாம் வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கானபெட்டியின் ஒரு சக்கரம் தடம் புரண்டது.இதனால் இந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக போடி ரயில் 118 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
தீபாவளி நாளில் தங்கம் விலை உயர்வு
கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை நாளான இன்று மேலும் சவரனுக்கு ரூ. 120, கிராமுக்கு ரூ. 15 அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,455 எனவும், சவரனுக்கு ரூ. 59, 640 எனவும் விற்கப்படுகிறது.
டாபிக்ஸ்