Kedar Jadhav: தோனியை காப்பி அடித்த கேதர் ஜாதவ்! அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
எம்எஸ் தோனியை காப்பி அடித்து கேதர் ஜாதவ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் 1500 மணியிலிருந்து விடைபெறுகிறேன் என இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், பார்டைம் பவுலராகவும் விளையாடியவர் கேதர் ஜாதவ். இவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2014 முதல் 2020 வரை இந்தியாவுக்காக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தோனி போல் இன்ஸ்டாவில் ஓய்வு அறிவிப்பு
39 வயதாகும் கேதர் ஜாதவ் தனது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை காப்பியடித்து தனது இன்ஸ்டாவில் ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பகிர்ந்த பதிவில், " எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நீங்கள் அளித்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 1500 மணி நேரத்தில் இருந்து அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்காக 73 ஒரு நாள், 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் கேதர் ஜாதவ்.
கடைசி போட்டி
இவர் கடைசியாக 2020ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்தில் நடந்த ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
2014இல் ராஞ்சியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார் கேதர் ஜாதவ்.
இதைத்தொடரந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜாதவ் தனது முதல் சதத்தை அடித்தார். இவர் தனது கிரிக்கெட் கேரியரில் 2 சதம், ஆறு அரைசதங்கள் அடித்திருப்பதோடு, 1389 ரன்கள் எடுத்து, 42.09 சராசரியாக வைத்துள்ளார்.
வெற்றிக்கு வித்திட்ட ஜாதவ் இன்னிங்ஸ்
புனேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 351 ரன்களை சேஸ் செய்த போது ஜாதவ் வெறும் 76 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதுவே அவரது சிறந்த சர்வதேச இன்னிங்ஸ் ஆகும். அந்த போட்டியில், ஜாதவ் மற்றும் கோலி இணைந்து சிறப்பாக செய்து சதம் அடித்தார்கள். இருவரும் இணைந்து 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
2019 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்திருந்த வீரராக இருந்தார் கேதர் ஜாதவ். உலகக் கோப்பை போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் 80 ரன்கள் என மோசமான பார்மை வெளிப்படுத்தினார். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 52 ரன்கள் அடித்து, இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது ஆறுதலான விஷயமாக அமைந்தது.
2013-14 ரஞ்சி டிராபியின் போது ஜாதவ் வெளிச்சத்துக்கு வந்தார், அங்கு அவர் 87.35 சராசரியுடன் 1223 ரன்களுடன் அந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார். இதில் 6 அரைசதங்களும், 2 சதங்களும் அடங்கும். ஜாதவின் சிறப்பான ஆட்டம் மகாராஷ்டிரா அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது. அங்கு கர்நாடகாவிடம் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் போட்டிகளிலும் கலக்கல் ஆட்டம்
ஜாதவ் 93 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1196 ரன்கள் குவித்துள்ளார், இதில் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (இப்போது செயல்படவில்லை), சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவற்றுடன் விளையாடியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்